89405 55555 -இது ஒரு சாதாரண அலைபேசி நம்பர்தான். ஆனால் இந்த நம்பர் ஒரு மினிஸ்டரின் அரசியல் வாழ்க்கையையே சர்ச்சைக்குரியதாக்கியிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... ஆனால் அதுதான் நிஜம்.
"அந்த மினிஸ்டர் எங்க திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை மினிஸ்டராய் இருக்கும் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அந்த நம்பர் 38 வயதான ஜெயமணி என்ற லேடிக்குரியது' என நம்முடன் பேசிய திருப்பூர் மாவட்ட எம்.பி. சிவசாமி ஆதரவு ர.ர.க்கள்...
இப்ப எம்.பி. சிவசாமியோட ஆட்கள்னு சொல்லி…மா.பேரவை து.செயலாளரான சூர்யா செந்தில், தம்பி இப்ராஹிம் உள்ளிட்ட சிலரையும் கட்சியை விட்டு ஒதுக்கிட்டாரு.
ஆனா திடீர்னு ஜெயமணிங்கற ஒரு பொண்ணை ரெண்டு மாசத்துக்கு முன்னால அம்மாகிட்ட கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தி கட்சியில சேர்த்துவிட்டாரு.
யார் இந்த லேடின்னு இண்டு இடுக்குகளையெல் லாம் ஆராய... சாதாரண நிலையிலிருந்த ஜெயமணி இவ்வளவு சீக்கிரமா தொழி லதிபரா எப்படி ஆச்சுன்னு தெரிய வந்தது.
89405 55555 -இது அந்த ஜெயமணியோட நம்பர்.
89404 55555- இது மினிஸ்டர் ஆனந்தனோட நம்பர். ரெண்டுமே வோட போன் நம்பர்கள் தான். இந்த ரெண்டு நம்பரும் சி.யூ.ஜி. பண்ணியிருக்காங்க.
கடந்த மே மாசத்துலயிருந்து ஜூலை வரைக்கும் எடுத்த லிஸ்ட்படியே இந்த ரெண்டு நம்பர்களுக்குள்ள அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் பரிமாறப்பட்டிருக்கு.
அதுவும் கடந்த மே 20-ந் தேதி மட்டும் ஜெயமணியோட செல்போன் டவர் சென்னை மூச்சாச்சி மேன்சன், நம்பர்-7, கஸ்தூரி எஸ்டேட், 3-வது வீதியை அதிக பக்கங்களில் காட்டியிருக்கிறது.
அந்த ஜெயமணியோட நம்பர் லிஸ்ட்ல இன்னும் சில வி.ஐ.பி.யோட நம்பர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்திட்டோம்.
அந்த நம்பர் 94436 34444. இந்த நம்பருக்கு ஜூலை 14-ந் தேதி மதியம் 1.27-க்கும், திரும்பவும் 1.36 மணிக்கும் ஜெயமணி தொடர்புகொண்டு பேசியிருக்கும் அந்த நம்பர் ஆனந்தனோட அரசியல் எதிரியாய் நிற்கிற சிவசாமி எம்.பி.யோடது. ஆனந்தனுடன் தொடர்பில் இருந்து கொண்டு நேர் எதிரியாய் நிற்கும் சிவசாமியுடன் ஜெயமணி பேச வேண்டிய அவசியமென்ன...?
இவரும் ஆனந்தனிடமிருந்து பதவியைப் பறித்து திருப்பூர் மாவட்டத்தின் மினிஸ்டராக ஆவதில் குறியாக இருப்பவர். நடராஜனிடம் பேசிய அடுத்த 1 மணி நேரத்திற் குள்ளாகவே அதாவது... காலை 09-36 மணியளவில் ஆனந்தனின் இன்னொரு நம்பரான 94437 40710 நம்பருக்கும் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் ஜெயமணி.
ஆனந்தனால் கட்சிக்குள் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஜெயமணி, ஆனந்தனுக்கு நேர் எதிரிகளாக நின்றுகொண்டிருக்கும் சிவசாமி, நடராஜன் இருவரிடமும் மாறி, மாறி பேச வேண்டிய அவசியமென்ன? யாரை, எதற்காக மிரட்ட இந்த வேலை? கூடிய சீக்கிரம் இந்த டீடெய்ல்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பப்படும்'' என்கிறார்கள் உறுதியாய்.
ஜெயமணியின் நம்பருக்கு உரிய முகவரியைப் பிடித்தோம். அவினாசி ரோட்டில் உள்ள ப்ரைம் இன்க்ளேவ் அபார்ட்மெண்ட்டில்தான் சமீபத்தில் ஜெயமணி ப்ளாட் வாங்கியிருக்கிறாராம். …"அவங்க இப்ப இல்லை...' என்று கேட்டில் திருப்பி யனுப்பப்பட்ட நாம் அலைபேசியில் ஜெயமணியை தொடர்புகொண்டும் பிடிக்க முடியவில்லை.
மறுநாள், நம்மை தொடர்புகொண்ட ஜெயமணி நமது கேள்விகளுக்குப் பிறகு,
""அமைச்சர் ஆனந்தன் எங்களுக்கு நெருங்கிய உறவினர். அமைச்சரின் மனைவி எனக்கு அத்தை. என் மகனும் அமைச்சரின் மகனும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுவார்கள். பேஸ்புக்கிலும் இருக்கிறார்கள். அமைச்சரோடு கட்சி தொடர்பாகத்தான் நான் பேசியிருக்கிறேன். அதைக்கூட தவறாகப் பேசுகிறார்கள் அமைச்சரின் உட்கட்சி எதிரிகளும், நான் கட்சி பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என நினைப்பவர்களும். இப்போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன். வந்தவுடன் மேலும் விரிவாகப் பேசுகிறேன்'' என்றார் தழுதழுத்தபடியே.
நான் அம்மாவின் திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டுமே தீவிரம்காட்டி வருகிறேன். இதுதான் உண்மையே தவிர அந்தப் பொண்ணோட தொடர்புபடுத்தி என்னைப் பத்தி வர்ற தகவல்கள்ல துளிகூட உண்மை இல்லை'' என மறுக்கிறார்.
காங்கேயம் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.என். நடராஜனோ, ""அந்த லேடி ஜெயமணி கூப்பிட்டிருந்தாங்க. பேசணும்னாங்க. வரச்சொன்னேன். வந்தவங்க "ஒரு பிரச்சினை சம்பந்தமா பேசணும்'னாங்க. "எதுன்னாலும் அம்மாகிட்ட போய் சொல்லிருங்க'ன்னு சொல்லி அவங்களை அனுப்பிட்டேன்'' என பதறுகிறார்.
அமைச்சரின் ஆதரவாளர்களோ, ""எம்.பி. சிவசாமி மாவட்டச் செயலாளராக இருந்தபோது கட்சி அலுவலகம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி வசூலித்தார். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இடமும் வாங்கினார். எங்க தலைமையிடமும் சொல்லி அப்போது குட்-புக்கிற்கு போனார். ஆனால் அந்த மனையை தன் மனைவி பெயரில் கிரயம் செய்து கொண்டவர், இரண்டு மாதத்துக்கு முன்பு இரண்டரை கோடி ரூபாய்க்கு மனையை விற்றுவிட்டார். அந்த சூர்யா செந்தில் பனியன்ரோல் திருட்டில் இரண்டு வருட ஜெயில் தண்டனை அடைந்தவர். தம்பி இப்ராகிம் மீதும் சில புகார்கள் வந்தன. இதனால் அமைச்சர் அவர்களை கட்சியை விட்டு நீக்க சிபாரிசு செய்தார். இந்தக் கோப மும், மீண்டும் மா.செ. வாகி எம்.பி. சீட் வாங்க வும் சிவசாமிதான் இப் படி அமைச்சருக்கு எதிராக கிளப்பியிருக் கிறார்'' என்கிறார்கள்.
எம்.பி. சிவசாமியின் கருத்தை அறிய அவர் நம்பருக்குத் தொடர்புகொண்டோம். அவரை லைனில் பிடிக்கவே முடியவில்லை.
வாழ்க்கையில் பெரும் உச்சங்களுக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் தவறினால், அதலபாதாளம் அவர்களை வாரி இறுக்கிக்கொள்ளும். அதல பாதாளத்தின் கோரப் பிடியில் சிக்கி மீளாதவர்கள் இங்கே பலருண்டு. அதுவும் பெண்கள் விஷயமென்றால் பாதாளத்தின் பிடி மிகமிக இறுக்கமானது. யார், யார் அந்த இறுக்கத்திலிருந்து மீளப்போகிறார்களோ தெரியவில்லை.