புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013

இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி 
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர்  கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று  காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்திருந்தார். அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பொதுவான விடயங்களை பலவற்றை நாம் பேசினோம். அவர் என்னிடம் பல கேள்விகளையும் கேட்டிருந்தார்.

குறிப்பாக குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்படும் புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் நீதிமன்ற அணுகு முறை தொடர்பாகவும் என்னிடம் கேட்டறிந்து கொண்டார்.
 
மேலும் யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தார்.

அத்துடன் எமது அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பரிந்துரைகள் குறித்து தெளிவுபடுத்தினேன். தொடர்ந்து தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருப்பதாகவும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் கேட்டறிந்தார்.

இதேவேளை, பள்ளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் அவரது கவனம் உள்ளதுடன் இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டார்.

அதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம். இது குறித்து அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தேன்.

இதேவேளை, ஏனைய மதங்களை பற்றி இழிவுபடுத்துவதை குற்றமாக கருதும் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளமை குறித்தும் தெரிவித்தேன். மற்றும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சு , பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதும் நடைமுறையில் ஏன் உள்ளது, வெலிவேரிய சம்பவம், தகவல் அறியும் சுதந்திரம், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் விளக்கங்களையும் மேட்டறிந்து கொண்டார் என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=510532260926591127#sthash.XIOD87gW.dpuf

ad

ad