புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013

இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாம் எல்லோரும் மனிதர்கள் பிறந்த வகையில் நாம் இன மதம் கொண்டு பிரிக்கப்பட்டிருக்கிறோம். இது தற்காலிகமானது. அதை மறந்து இனங்களுக்குள்ளே திருமணம் செய்யும் போது பல விபரீத விளைவுகளை தடுக்க முடியும். மொழிப்பிரச்சினையும் தீர வாய்ப்புண்டு.
எனவே உங்கள் பிள்ளைகளை ஏனைய இன மத பிள்ளைகளுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும். அதற்காக அவர் மதம் மாற வேண்டிய தேவையில்லை. அவரது மதத்தைப் பேணும் அதேவேளை ஏனையவரது மதத்தையும் மதித்து நடக்க முடியும். இன, மத மொழி பேதம் பார்த்து பாடசாலைகள் அமைக்கப்பட்டதே இலங்கையின் முதல் சாபக் கேடு ஒருவரையொருவர் புரியாமல் உள்ளனர்.
எனவே இலங்கையில் இன, மத, மொழி ரீதியான பாடசாலை முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அதேபோல் இன மத ரீதியிலான அரசியல் கட்சிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
எமது மாவட்டத்தில் தமிழரிடையே 5 கட்சிகள் போட்டியிடுகின்றன. இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி அடிதடி வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால் எல்லோரும் தமிழர்களே ஏன் கட்சிகள் தேவை?
தோட்ட லயன்களில் ரி.வி.யில் இந்தியா சனல்களைப் பார்த்துவிட்டு கலாசார சீரழிவுகளில் ஈடுபட முனைகிறார்கள்.
தோட்டப்பகுதிகளில் பெரும்பாலான மக்கள் மது பாவனைக்கு அடிமையாகவுள்ளனர். இதனால் அரசியல்வாதிகள் அவர்களை இலகுவாக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
இங்கு 4 சமயங்களின் தலைவர்கள் இருக்கிறீர்கள். - நீங்கள் 4 திசையிலும் ஜொலிக்கக் கூடிய நட்சத்திரங்கள் ஆவீர்கள். நீங்கள் முழு இலங்கையிலும் ஐக்கியம் நிலவுவதற்கு உங்கள் ஒளியாகிய நிலவைப் பரவச் செய்ய வேண்டும் என்றார். சிங்கள மொழியில் பேசிய போதிலும் சமகால மொழிப்பரிவர்த்தனை மூன்று மொழிகளிலும் ஒலிபரப்ப விட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad