புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013

யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
செய்து ஐப்பானின் ஜெய்க்கா நிறுவன உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதியை பார்வையிட்டார்.
இதேவேளை நவி.பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் சுற்றாலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்தோடு இராணுவத்தினரது நடமாட்டமும் முற்றாக குறைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை நவி.பிள்ளை வரவேற்பதற்காக சுகாதார அமைச்சிலிருந்து மூவர் அடங்கிய விசேட குழுவினரும் யாழ்ப்பாணத்திற்கு நேற்று மாலை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ளனர்.
நவி.பிள்ளையின் விஜயம் மற்றும் அவரைச் சந்திக்கும் நபர்கள் தொடர்பான எந்த தகவல்ககளும் இலங்கை அரசாங்கத்தினால் முற்று முழுதாக இரகசியமாக பேணப்படுகின்றன.
நாளை காலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் நவி.பிள்ளை விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad