புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014

உதயனுக்கு பயந்தது யாழ். மாநகர சபை 
மரபை மீறி கையெழுத்து பதிவேட்டை வெளியில் கொண்டு சென்றால் நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் செய்தியை பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.


மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று முதல்வர் யோகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இன்றைய மாதாந்த கூட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை கொண்டு வந்தனர் எனினும் அதற்கு சபையில் அனுமதி வழங்கப்படாமையினால் எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வெளியேறினர்.

எனினும் எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் தமது வரவைப்பதிவு செய்து கொள்ளவில்லை. அதனையடுத்து பதிவேட்டினை வெளியில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு சபையில் முதல்வரால் கேட்கப்பட்டது.

எனினும் சபையின்  மரபில் அவ்வாறு இல்லை என ஆளும் தரப்பினரால்  தெரிவிக்கப்பட்டது.  எதிர்க்கட்சி பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும். அத்துடன் குறித்த பிரேரணை கொண்டுவரப்படுவது குறித்து என்னிடம் அறிவித்திருக்க வேண்டும் எனவும் முதல்வர் கவலை வெளியிட்டார்

இருப்பினும் பதிவேட்டில் கையொப்பம் வாங்குவது மாநகர சபை உத்தியோகத்தர்களின் கடமை அவர்கள் அதனை சரியாக செய்யவில்லை. இது உத்தியோகத்தர்களின் தவறே தவிர எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தவறு அல்ல என மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

அவ்வாறு பதிவேட்டை கொண்டு செல்வது மரபுக்கு மீறியது எனவே நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் இதனைச் செய்தியாக பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.

அதனையடுத்து தவறுகள் செய்வது மனித இயல்பு எனினும் அவற்றை மன்னிப்பது பெருந்தன்மை என்று சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்க பதிவேடு அலுவலக அறைக்கு கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சியினர் கையொப்பமும் இட்டுச் சென்றனர்.

ad

ad