புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014












21 ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட்:

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் மூன்று விக்கட்டுக்களால் வெற்றி

21ஆவது பொன் அணிகளின் சமரில் 
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா  இந்து கல்லூரியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இப்போட்டி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.1993ம் வருடம் இப்போட்டி தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது வரை நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 9 தடவைகள் மட்டக் களப்பு சிவானந்தா வித்தியாலய அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 41.3. ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றனர். பே.பானுசாந் 22, சி.அகில்ராஜ் 18, ரா.ராசித் 14, செ.திவாகரன் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சிவானந்தா வித்தியாலயத்தின் சார்பில் வை.சசிகரன் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட் டுக்களைப் பெற்றுக் கொண்டார்.
120 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என களம் புகுந்த சிவானந்தா வித்தி யாலய அணியினர் 32.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங் களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.
எம்.நிவாசன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டமும், சி.அனோஜன் 31, ஏ.பிரிவிராஜ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி சார்பில் செ.திவாகரன் 2, ரஸ்மின் 2, டெரன்ஸ் 1 விக்கட்டுக்களைவீழ்த்தினர்
இப்போட்டியில் சிற்நத களத்த தடுப்பாளராக சி.அகில்ராஸ் சிறந்த பந்து வீச்சாளராக எம்.நிவாசன், பந்து வீச்சாளர் வை.சசிகரன், போட்டி நாயகனான எம்.நிவாசன் ஆகியோர் தெரிவு செய்ப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு முந்நாள் வீரர் அமரர் மு.நர்மதன் நினைவாக விசேட பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன
திருகோணமலை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் மார்க் அன்டனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா கௌரவ விருந்தினராகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விNஜந்திரன் விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ad

ad