30 மே, 2014

யாழ் மாநகரசபை  பகுதி நேர ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி  போர்க்கொடி
யாழ். மாநகர சபையில் பகுதி நேர பதில் தொழிலாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி மாநகர சபைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியிலிருந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போது சுகாதார பரிசோதர்களுக்கு இன்று பிற்பகல் மாநகர சபையில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகைதரவுள்ளதால் தமக்கு நீதி பெற்றுத்தர கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகர சபையில் எட்டுத் தொடக்கம் பத்து வருடகாலமாக கடமையாற்றிய 37 பேரில் 27 பேருக்கு நியமனம் வழங்கப்பட்ட போது 10 பேருக்கான நியமனம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் 2012- 2013 காலப்பகுதியில் வேளையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கும், இதுவரை மாநகர சபையில் வேலை செய்யாதவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது, லஞ்சமா,அரசியலா நேர்முகத்தேர்வா?, மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என கூறிய ஆணையாளரே முதல்வரே நீங்கள் செய்தது நியாயமா அல்லது நீதியா அல்லது நாடகமா என்ற பல வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.