புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014




""ஹலோ தலைவரே...   44% ஓட்டுகள், அதன் மூலமாக 37 எம்.பி. சீட்டுகள்னு உற்சாகமா இருக்கிற அ.தி.மு.க தலைமை, புதிய உறுப்பினர் அட்டை வழங்கு வதில் மும்முரமாயிடிச்சே.''

""இன்னும் 2 வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், தற்போது நிலவும் வெற்றி உற்சாகத்துடன் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினால் கட்சிக்காரர் களும் 2016ஐ மனதில் வைத்து வேலை பார்ப்பாங்களே!''

""தலைவரே.. புதிய உறுப்பினர் அட்டை ஒரு பக்கம்னா, நீண்டகால உறுப்பினர்களான சீனியர்கள் தங்கள் மேலே தலைமை எப்போது நடவடிக்கை எடுக்குமோன்னு அதிர்ச்சி யில்தான் இருக்காங்க. கே.பி.முனுசாமியை அதிரடியா நீக்கிய ஜெ., திருப்பூர் தொகுதி முன்னாள் எம்.பி. சிவசாமியையும் நீக்கியிருக்காரு. தி.மு.ககாரங் களோடு சிவசாமி நெருக்கமா இருக்காருன்னும், மு.க.ஸ்டா லின் வரைக்கும் தொடர்பு வச்சிருக்காருன்னும், தேர்தலில் அ.தி.மு.கவுக்கு எதிராகவும் தி.மு.கவுக்கு மறைமுகமா ஆதரவாகவும் வேலைபார்த்தாருன்னும் தலைமைக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு இன்னொரு தகவலும் சொல்றாங்க. மறுபடியும் தனக்கு சீட் கொடுக்கலைங்கிற கோபத்தில் இருந்த சிவசாமி வாக்குப் பதிவுக்கு நாலு நாளைக்கு முன்னாடி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு போன் போட்டு, இலை வேட்பாளர் சத்யபாமாவுக்கு வேலை செய்ய வேணாம். முரசு தினேஷ் நம்ம பையன்தான். அவருக்கு வேலை செய்யுங்க. மத்ததை எலெக்ஷன் முடிஞ்சதும் நான் சொல்றேன்னு சொல்லியிருக்கிறாரு. இதை  அப்படியே ஒரு நிர்வாகி டேப் பண்ணி அமைச்சர் ஆனந்தன்கிட்டே கொடுத்திருக்காரு. அமைச்சர் அதை அப்படியே மேலிடத்துக்கு அனுப்பி வச்சிட்டாராம். இத்தனைக்கும் சிவசாமிதான் ஆனந்தனுக்கு அரசியலில் குருநாதர். ஆனாலும் போட்டுக் கொடுத்திட்டாரு, அதைத் தொடர்ந்து சிவசாமியைக் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு ஜெ.''

""அ.தி.மு.க.வுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருக்கிற கொங்கு பெல்ட்டிலேயே ஹிட்லிஸ்ட் பலமா இருக்குதே?''

""ஆமாங்க தலைவரே.. … வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் நீக்கப் பட்டது தொடர்பா புதுத் தகவல் கிடைத்திருக்குது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் புரஃபசர், டெக்னிக்கல் உள்பட 70 போஸ்டிங் போடப்பட்டிருக்குது. ஒரு போஸ்டிங்குக்கு 50 லட்சம் வரைக்கும் வாங்கப்பட்டதாம். புரஃபசர் வேலைக்கு 50  லட்சமான்னு அதிர்ச்சியும் ஆச்சரியமுமா விசாரித்தால், இது என்னங்க பெருசு, பச்சையப்பா கலைக் கல்லூரி புரஃபசர் வேலைக்கே உயர்கல்வித்துறை அமைச்சர் தரப்பில் 30 லட்சம் வரை வசூலித்த அதிர்ச்சி விவரம் தெரிய வருது. 43 வயதுக்காரர் ஒருத்தர் நேரடியாவே உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்கிட்டே வந்து, 30 எல் கொடுத்திருக் காரு. மந்திரியோ, நீங்க இன்னும் 10, 15 வருசம்தான் வேலை பார்க்க முடியும். 30 எல் கொடுத்து போஸ்டிங் வாங்குனீங்கன்னா உங்களுக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்லி, போஸ்டிங் போடலையாம்.''

""தொழில் நேர்மைன்னு சொல்றாங்களே, அது இதுதானா?''

""மந்திரிகளோட பி.ஏக்களா இருக்கிறவங்களும், மந்திரி வட்டாரத்தில் நெருக்கமா இருக்கிற அதிகாரிகளும் எந்த அளவுக்கு ராஜ்ஜியம் நடத்திக்கிட்டிருக்காங்கன்னு சொல் றேன். வேளாண்துறை அமைச்சரா இருந்த தாமோதரன் கிட்டே பி.ஏ.வா இருந்தவர் தியாகராஜன். அதுபோல, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரா இருப்பவர் ஸ்டாலின். இந்த இரண்டுபேரும்தான் மந்திரிகிட்டே பவர்ஃபுல்லா இருந்து, கோவை வேளாண் கல்லூரி போஸ்டிங் சம்பந்தமான கலெக்ஷனைப் பார்த்திருக்காங்க. ஒரு போஸ்டிங்குக்கு 50எல் வசூல் செய்தாலும், மந்திரித் தரப்புக்கு 15எல்தான் போயிருக்குது. அதுமாதிரி, விவசாயிகளுக்கு கொடுக்குற விதை நெல்லை தரமில்லாமல் சப்ளை பண்ணி, அதிலும் பணம் பார்த்திருக்காங்க. தாமோதரனுக்கு பதவி போனாலும் இவங்க அதே துறையில் சவுக்கியமா இருக்காங்க. வேளாண்துறையோட புது அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திகிட்டே துணை இயக்குநர் ஸ்டாலின் ஒட்டிக்கிட்டு, துறையில் ஆதிக்கத்தைத் தொடருராம். மந்திரி மாற்றத்தைத் தொடர்ந்து பி.ஏ.வும் மாற்றப்பட்டிருந்தாலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் ஊட்டிக்குப் போனப்ப, தியாகராஜனும் போயிருக்காரு. சீட்டுக்கட்டைக் கலைக்கிற மாதிரி மந்திரிப் பதவி காலியாயிடுது. ஆனா, பி.ஏக்கள், அதிகாரிகள் ராஜ்ஜியம் தொடருதுன்னு கோட்டையில் புலம்பல்கள் கேட்குதுங்க தலைவரே..''

""மந்திரிகள் மீதான அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தொடரும் போலிருக்குதே?''

""அதுதான் மந்திரிகளுக்கும் மா.செக்களுக்கும் பீதியை உண்டாக்கியிருக்குது. தோப்பு வெங்கடாசலம், சுப்ரமணியம், ராஜேந்திர பாலாஜி, மாதவரம் மூர்த்தி, பரமக்குடி சுந்தர்ராஜன் இவங்க வட்டாரமும் மிரண்டு கிடக்குது. அதுபோல மா.செக்கள் மாற்றமும் வேகமா நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது. உளவுத்துறை கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ரிப்போர்ட்டில் மந்திரிகளாக இருக்கும் சில மா.செக்கள் உள்பட பல மா.செக்களையும் மாற்றினால்தான் எம்.பி. தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியை அள்ளலாம்னு சொல்லப்பட்டிருக்குதாம். அதனால புதுமுகங்கள் பலருக்கு மா.செ. பதவி கிடைக்கலாம்னு பேச்சு அடிபடுது. அதுபோல, நாடார் சமுதாயத்து வாக்குகள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த முறை அ.தி.மு.கவுக்கு கிடைக்கலைன்னும் ரிப்போர்ட் கிடைத்திருப்பதால், அந்த ஏரியாவிலும் கவனம் செலுத்தப்படுது. இதற்கிடையில், ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போன தி.மு.க அடுத்த கட்டமா என்ன செய்யப்போகுதுங்கிறதையும் உற்று நோக்கும் ஜெ., தனக்கு உடனுக்குடன் தி.மு.க சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்டுகள் வேணும்னும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காராம்.''

ad

ad