புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014





ஸ்ருதிக்கு எதிராக...!

"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

இதையடுத்து சினிமா புகைப் படக் கலைஞர்கள் சிலரை அழைத்து தங்களுக்கே "உரிய பாணி'யில் விசாரித்ததாம் போலீஸ். இதில் பாதிக் கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் தங்களின் சங்கத்தில் முறையிட... இப்போது ஆந்திர தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையை ஸ்ருதிக்கு எதிராக திருப்பியிருக்கிறதாம்.

"எங்களிடமோ... நடிகர் சங்கத்திடமோ புகார் செய்துவிட்டு தீர்வு எட்டாத பட்சத்தில்தான் போலீஸுக்கு போயிருக்க வேண்டும்' என ஸ்ருதி மீது கடுப்புக் காட்டி யிருக்கிறார்கள்.

முணுமுணுப்பு!

சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டதில் தனுஷுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏற்கனவே சிவகார்த்தியை ஹீரோவாக்கி "எதிர்நீச்சல்' படத்தைத் தயாரித்த தனுஷ் இப்போது சிவகார்த்தி-ஸ்ரீதிவ்யா நடிக்கும் "டாணா' படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவ கார்த்திகேயன் அலட்சியப்படுத்துவது போல் தகவல்கள் பரிமாறப் பட்டன.

இப்போது, சிவகார்த்தியின் போட்டியாளர் எனப்படும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரிக்க... உதயநிதியின் மனைவி கிருத்திகா இந்தப் படத்தை இயக்கு கிறாராம்.

இந்த இரண்டு விஷயத்தையும் முடிச்சுப் போட்டு முணுமுணுக் கிறாங்க ஏரியாவில்.

த்ரிஷா இல்லாட்டி சமந்தா!

உதயநிதி-நயன்தாராவை வைத்து "இது கதிர்வேலன் காதல்' படத்தை இயக்கினார் "சுந்தரபாண்டி' எஸ்.ஆர். பிரபாகரன். தனது அடுத்த படத்தையும் பிரபாகரனே இயக்க முடிவு செய்திருந்தார். ஆனால் கதிர்வேலன் காதல் சொதப்பியதால் பிரபாகரன் கழற்றிவிடப்பட்டார். இந்தப் படத்தில் "சுந்தரபாண்டி' படத்தைப் போலவே லட்சுமிமேனனுக்கு செம கேரக்டர் ரெடி செய்து வைத்திருந்தாராம் பிரபாகர். ஆனால் டைரக்டர் மாறிய தால், கதையும் மாறியது. ஹீரோயினும் மாறிட்டாராம்.

இப்போது "என்றென்றும் புன்னகை' டைரக்டர் அஹமது இயக்கத்தில் நடித்து தயாரிக்கவிருக்கிறார் உதயநிதி. இதில் நாயகி வேஷத்திற்கு சமந்தா இல்லாட்டி த்ரிஷாவாம்.

இது ஒருபுறமிருக்க... உதயநிதியை இயக்கவிருந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இப்போது சிவகார்த்தியின் வலதுகரமாக இருக்கும் தயாரிப்பாளர் "எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்' மதன் தயாரிப்பில் படம் இயக்கப் போறாராம்.

சிரஞ்சீவியால் சிரமம்!

"நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரர் கிருஷ்ணவம்சி, தெலுங்கில் புகழ்பெற்ற டைரக்டர். வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு வம்சி படங்களில் நடிக்க ஆசைப்படு வார்கள் நட்சத்திரங்கள். 

இப்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரணையும், காஜல் அகர்வாலையும் வைத்து ஒரு படம் தொடங்கி யிருக்கிறார். 

"கதை சுமாரா இருக்கே... ஸ்கிரீன்பிளே சொதப்பலா இருக்கே, கதை பாணி பழைய ஸ்டைலா இருக்கே...' என குறை சொல்லுகிறார் சிரஞ்சீவி.

திட்டமிட்டு மகனை பெரிய நடிகராக்கியிருக்கும் சிரஞ்சீவியின் அக்கறைதான் இந்த மூக்கு நுழைப்பிற்குக் காரணம். என்றாலும், சிரஞ்சீவியின் தலையீடு காரணமாக ரொம்பவே வருத்தத்தில் இருக்காரு வம்சி.


 உஷ்!

சீயானை வைத்து பெரும் பட்ஜெட்டில் ஷங்கரா இயக்கி வரும் ஓரெழுத்துப் படம் பலமுறை ஃபைனான்ஸ் பஞ்சாயத்துகளால், பலமுறை கருத்து வேறுபாடுகளால் சங்கடங்களைச் சந்தித்துக் கொண்டிருக்க...

"இந்தப் படத்தை வேறு நிறுவனத்திற்கு கை மாத்தி விடுங்க' என்கிறாராம் டைரக்டர்.

"அம்பானி' குரூப்பை மனதில் வைத்து டைரக்டர் இப்படிச் சொல்றாராம்.

ad

ad