""தி.மு.கவில் ஜூன் 2ந் தேதி நடக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போறாருங்கிறதை தி.மு.க.வின் அடி மட்டத் தொண்டர்களும் எதிர் பார்த்துக்கிட்டி ருக்காங்கப்பா.''…
""மு.க.ஸ்டாலின் இப்போதைக்கு மா.செக்களை மாற்றவேண்டாம்னும், தனக்கு செயல்தலைவர் பதவியைக் கொடுத்தால், அதன்பிறகு, மா.செக்கள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம்னு நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்னு கடந்த 3 நாட்களா தனக்கு நெருக்கமான கட்சிக்காரங்களிடம் சொல்லிக்கிட்டிருக்காராம். இதில் அவர் உறுதியா இருக்காருன்னு அவர்கிட்டே பேசியவங்க சொல்றாங்க. ஆனா, ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி கொடுக்கணும்னு கட்சித் தலைவரான கலைஞர்கிட்டே எடுத்துச்சொல்லும் தைரியம் யாருக்குமேயில்லை.''
""யாரும் சொல்லாவிட்டாலும் கட்சிக் குள்ளே என்ன நடக்குதுன்னு கலைஞருக்குத் தெரியாமலா இருக்கும்?''
""இந்த மூவ்மெண்ட்டுகள் பற்றி மு.க.அழகிரி வட்டாரம் என்ன சொல்லுது?''
""போன 25-ந் தேதியன்னைக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் அழகிரியோட ஆதரவாளரான தொண்டரணி மாஜி துணை அமைப்பாளர் சலீம் இல்லத் திருமண விழா நடந்தது. அதில் கலந்து கிட்ட அழகிரி, மணமக்களை வாழ்த் திட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிட் டாரு. அரசியல் பற்றி எதுவும் பேசலை. மீடியாக்கள் மைக்கை நீட்டுன போதும் எதுவும் பேசாமல் காரில் ஏறிக் கிளம் பிட்டாரு. ஜூன் 2-ந் தேதி உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி முடிவெடுக் கும்வரை எதுவும் பேசாமல் அமைதியா இருப்பதுன்னு
""கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழாக்கள்தான், பெருந்தோல்வியை சந்தித்திருக்கும் தி.மு.கவுக்கு இந்தச் சூழலில் உற்சாக டானிக். வழக்கம் போல பேராசிரியர் தலைமையில் பொதுக்கூட்டம், கட்சியின் பல்வேறு அமைப்புகள் சார்பில் வாழ்த் தரங்கம்னு நிகழ்ச்சிகள் நடக் குது. அறிவாலயத் தில் கட்சிப்பிரமுகர் களையும் தொண்டர்களை யும் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுவது கலைஞரின் வழக்கம். அதுதான் இரு தரப்புக்கும் மனதளவில் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுக்கும். ஜூன் 2 உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து, 3-ந் தேதி பிறந்தநாள் விழாக்கள் களைகட்டும்ப்பா.''
""கட்சியோட எதிர்காலத்தை மனசிலே வச்சி செயல்படணும். பதவிகளை மட்டும் குறிவச்சி செயல்பட்டா எந்த மாற்றமும் இருக்காது.''
லாஸ்ட் புல்லட்
2ஜி விவகாரத்தில் அம லாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் மே 26 அன்று ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் ஆகியோர் டெல்லி ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகி னர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள், உடல்நிலை காரணமாக ஆஜராக முடியாததை அவரது வழக்கறிஞர் சரண், கோர்ட்டில் தெரிவித்தார். சரணை இந்த வழக்கிற்கு நியமித்து, அவருக்கு அனைத்து விவரங்களையும் எடுத்துத்தந்தவர் வக்கீல் என்.ஆர். இளங்கோ. தயாளு அம்மாள் நேரில் ஆஜராக முடியாததை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சார்ஜ் ஃப்ரேம் செய்யும்போது அவர் வருகை தரவேண்டும் என்றார். வக்கீல் சரண் அதனை மறுத்து வாதாடியதுடன், இந்த வழக்கி லிருந்தே அவரை டிஸ்சார்ஜ் செய்யவேண்டும் என பெட்டி ஷன் தாக்கல் செய்தார். இதனை அமலாக்கப்பிரிவு வக்கீல் எதிர்த்தார். பெட்டிஷனை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதி லளிக்க அரசுத்தரப்புக்கு அவ காசம் வழங்கினார் நீதிபதி. இதனிடையே, ஆ.ராசா தன் மீதான குற்றச்சாட்டுகள் தவ றானவை என்பதை நிரூபிப்ப தற்கு வாய்ப்பாக தன்னைக் கூண்டிலேற்றி விசாரிக்க அனு மதிக்கவேண்டும் என நீதிபதி யிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுப்பணித்துறை யின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.கோபால கிருஷ்ணன் ஏற்கனவே 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற் றவர். மே 31-ல் அவரது பணி நீட்டிப்பு முடிவடையும் நிலை யில் மேலும் பணி நீட்டிப்புப் பெற முயற்சித்து வருகிறார். அரசுத்தரப்பும் அவருக்கு சாதகமாகவே இருப்பதால், தகுதியும் நீண்ட அனுபவமும் கொண்டு தலைமைப் பொறியாளர் பதவிக்கான பட்டியலில் காத் திருக்கும் பொறியாளர்கள் கடும் அதிருப்தியிலும் மனச்சோர்விலும் இருக்கிறார்கள். பொது இடம் என்று கூட பார்க்காமல் கெட்ட வார்த்தை களைப் பயன்படுத்துபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் சிவகாசிக்கு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டபோது, மைக் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மேடையில் இருந்தவர் களையும் மைக்செட் ஏற்பாடு செய்தவர்களையும் சகட்டுமேனிக்குப் பேசித்தள்ள, விழாவுக்கு வந்திருந்த பயனாளிகளான பெண்கள் முகம் சுளித்து, காதுகளைப் பொத்திக் கொண்டனர். அமைச்சர் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ள நிலையில், அவருடைய பேச்சுபாணி பற்றிய புகாரும் மேலிடத்திற்கு சென்றுள்ளதாம். |