புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014




""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம் காரணம் அந்த சாமியார்தான். எங்கள் குடும்பத்தை ஏமாற்றி யது மட்டுமில் லாமல், எத்தனை யோ குடும்பங்களை அவர் ஏமாற்றியுள்ளார்'' என்ற ரீதியில் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மின்னஞ்சல் நமக்கு வர... களத்தில் இறங்கினோம்.

""என் பெயர் அபிராமி. நான் இப்பொழுது எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.டெக். படிக்கிறேன். அப்பா சிவில் இஞ்ஜினியர் ஹரிஷ், அம்மா மீனாள், தம்பி அஜய் படிச்சிட்டிருக்கான். இது தான் எங்களுடைய குடும்பம். ஆறு வருஷத்திற்கு முன்பு எங்க அப்பா பார்த்துட்டு வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. சொந்தக்காரங்க மூலம் கோயம்புத்தூரில் ஜோதிடர் ரமேஷ் பாபுவை அப்பாவும், அம்மாவும் போய் பார்த்துட்டு வந்திருக்காங்க. முதலில் உங்களுக்கு நேரம் சரியில்லை என சொல்லியவர், பிறகு "எனக்கு தெரிஞ்ச சக்தி வாய்ந்த சாமியார் ஒருத்தர் தூத்துக்குடியில் இருக்கிறார். அவர்கிட்ட எளிதில் அப்பாயிண்மெண்ட் கிடைக்காது, இருந்தாலும் உங்களுடைய நிலைக்காக நான் அவரிடம் பேசுறேன். அவர் சரி என சொல்லிட்டார்ன்னா, உங்கள் வீட்டிற்கு கூட்டிட்டு வார்றேன்' என ஏக பில்டப்போடு சொல்ல, அம்மாவும், அப்பாவும் சரி எனச் சொல்லி மைசூருக்கு வந்துட்டாங்க. பிறகு ஒருநாள், ஒரு சாமியாரோடு ஜோசியர் ரமேஷ்பாபு எங்க வீட்டிற்கு வந்தார். அந்த சாமியாரும், "உன் புருசன் வளர்ச்சி பிடிக்காத, அவருடைய பார்ட்னர் செய்வினை வச்சிருக்கான். இதை சரி செய்யணும் என்றால் 48 நாளிற்கு பரிகார பூஜையெல்லாம் செய்யணும்...' எனச் சொல்ல, முதலில் எங்க அப்பாவிற்கு பிடிக்கவில்லை யென்றாலும், அம்மாவோட நச்சரிப்பால், ஏறக்குறைய ஐந்து லட்சத்தை சாமியாருக்கு கொடுத்து பரிகார பூஜையை ஆரம்பிச்சாங்க. சாமியார் என்றாலும் தன்னை சித்தர் என அடிக்கடி சொல்லுவாரு.

அதற்குப் பிறகு அந்தச் சாமியாரோட தொடர்பு எங்க வீட்டில் தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு. சாமியாரோட தூத்துக்குடி பெடரல் பேங்க் அக்கவுண் டிற்கு (அக்கவுண்ட் எண்: 11910 1000 44012 ஜி.சீனிவாசன்) பணமும் போக ஆரம்பிச்சுச்சு. தும்மல் விழுந்தால் கூட சாமியார் பெயரைத்தான் அம்மா சொல்லுவாங்க. இதனால்தான் என்னுடைய தாய் மாமா வீரேந்திரா- அன்னபூர்ணம் திருமணம் தூத்துக்குடியில் சாமியார் தலைமையில் நடந்தது. இது எங்க அப்பாவிற்கு பிடிக்காததால் போகப் போக... எங்க அம்மாவிற்கும், அப்பாவிற்கும் சண்டை வந்துட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் எங்க அம்மா, எங்களையெல்லாம் விட்டு விட்டு போயிட்டாங்க. அவங்க எங்களை விட்டுப் போய் ஒரு வருஷம் ஆகிட்டது. இப்ப என்னடாவென்றால், சொத்தைக் கேட்கிறார். ஆசிரமத்திற்கு எழுதிக் கொடுக்கணுமாம். எனது அம்மா முழுக்க... முழுக்க அந்தச் சாமியார் கைக்குள்தான் இருக்கிறார். அதேபோல் என்னுடைய அம்மா மாதிரி எத்தனையோ குடும்பங்கள், சாமியாரின் கையில் இருக்கு. எனது அம்மாவை மீட்டுத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு'' என்று கண்ணீர்மல்கக் கூறினார் மின்னஞ்சலுக்கு சொந்தக்காரி யான அபிராமி.


அந்தச் சாமியார் பெயர்...? என்றோம். ""தூத்துக்குடி யிலுள்ள ப்ரத்தியங்கிரா கால பைரவர் பீடத்தின் அதிபதியான சற்குரு சீனிவாச சித்தர் எனச் சொல்லு வாங்க'' என்றார் அவர்.

""இப்பொழுதுதான் அவருக்கு வளர்ச்சியே! ஆரம்பத்தில் தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடப்புப் பகுதியில் சிறிய அளவிலான ப்ரத்தியங்கிரா தேவி சிலையை வைத்து பூஜை செஞ்சுட்டு இருந்தார். வருபவர்கள் சாமி மட்டும் கும்பிட்டுப் போகலாம். யாரிடமும் பேச மாட்டார். சாமி கும்பிட வருபவர்களில் பணக்காரர்களை மட்டும் குறி வைத்து, "பரிகாரம் செய்தால் நன்றாக இருக்கும்' என பிட்டை சாமியார் போட... பேசாத சாமி நம் மிடம் பேசுதே... என்றெண்னி அவங்களும் தங்க ளுடைய கஷ்டத்தை தீர்க்க பரிகாரத்திற்கு சம்மதிப்பாங்க. பரிகாரம் செய்ய வரு பவர்களை தன்னுடைய அலுவலக முகவரியான சிவன்கோயில் தெரு, கவிதா காம்ப்ளக்ஸிற்கு வரவழைத்துதான் பரிகாரம் செய்வார். அப்படித்தான் படிப்படியாக வளர்ந்து 11 அடி உயர சிலையை நிறுவி, சாமியாராய் இருந்தவர், சித்தராய் மாறிட்டார். பரிகாரம் என்பது எல்லாம் ஏமாத்து. குடும்பப் பிரச்சினையில் வர்றவங்களில், பெண்களை மட்டும் வசியம் செய்து, தன்னோட பேச்சைக் கேட்பதுபோல் மாற்றிவிடுவார். அதற்குப் பிறகு அந்தப் பெண்கள்யார், எது சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கமாட்டாங்க. அந்த நிலைதான் அந்த மைசூர் பொம்பளைக் கும்'' என்றார் கோரம்பள்ளவாசி  ஒருவர். இவர் ஆரம்பக் காலக்கட் டங்களில் சீனிவாச சித்தரின் ப்ரத்தியங்கிரா கால பைரவர் பீடத்தில் தன்னார்வத் தொண்டு செய்தவர். நாளடைவில் சீனிவாச சித்தரின் சுயரூபம் தெரிய பீடத்தை விட்டு வெளியேறியவர்.

ப்ரத்தியங்கிரா கால பைரவர் பீடத்தின் அதிபதியான சற்குரு சீனிவாச சித்தருக்கும், மைசூரிலுள்ள அபிராமி யின் குடும்பத்திற்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த கோவை ஜோதி டர் ரமேஷ் பாபுவோ, ""சார் நான் இப்ப இராமேஸ்வரத்தில் இருக்கேன். நீங்க போனை ரெக்கார்டு பண்றதாக பரமேஸ்வரன்(!) சொல்றான். ரெக்கார்டு பண்ணிக்கங்க. குடும்ப கஷ்டம் என வந்தாங்க. ஜோதிடத் தில் என்ன சொல்லணு மோ, அதைச் சொன் னேன். எதாவது பரிகாரம் பண்ணலாமா..? எனக் கேட் டாங்க. நானும் தூத்துக்குடி சித்தரை காண்பித்தேன். நான் தான் கூட்டிட்டும் போனேன். அவங்களும் பரிகாரம் பண் ணிக்கிட்டாங்க. அதற் கப்புறம் நான் விலகிக்கிட்டேன். என்னை விட்டு விட்டு, சீனிவாச சித்தரை நேரடியாகக் கூப்பிட்டு தங்களுக்கு தெரிந்தவங்களுக்கு பரிகாரம் பண்ண ஆரம்பிச்சாங்க மீனாள். இப்ப என்னை சுத்துது இந்த பிரச்சினை. அந்த அம்மா குடும் பத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்கிறார்கள். சீனிவாச சித்தரோட தற்பொழுது பேசறது கிடையாது. இருந்தாலும் சொல்றேன். இந்த பிரச்சினையை விட்டு விலகிடுங்கள். சீனிவாச சித்தர் சக்தி படைத்தவர். அதர்வண வேதத்தை உச்ச ரிக்கிற அவரின் வார்த்தை சக்திமிக்கது. பிரச்சினைக்கு ஆளாகா தீர்கள்'' என எச்சரித்துவிட்டு தொடர்பைத் துண்டித்தார்.

பையன் படிக்கவில்லையென மைசூர் நிவேதிதா நகர் வீணாவும், தங்களுடைய இடம் விற்கவில்லையென மைசூர் பாப்டஹள்ளி நகர் கீதாவும், தூத்துக்குடி சாமியார் சீனிவாச னிடம் பரிகார பூஜைக்காக லட்சங்களை வாரியிறைத்து பரிகார பூஜை நடத்தியுள்ளார்கள். பரிகார பூஜை பலனளிக்காமல் இருக்கவே... நிவேதிதா நகர் காவல்நிலையத்தில் இருவரும் புகார் அளிக்க... சமரசம் பேசி பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளாராம் சித்தர் சீனிவாசன்.

சித்தரின் கஸ்டடியில் உள்ளதாகக் கூறப்படும் மீனாளைத் தொடர்புகொள்ள முயன்றோம். முயற்சி  பலனளிக்கவில்லை. இந்நிலையில், குற்றச்சாட்டிற்கு ஆளான ப்ரத்தியங்கிரா கால பைரவர் பீடத்தின் அதிபதியான சற்குரு சீனிவாச சித்தரிடம் விளக்கம் கேட்டோம். ""அந்த அம்மா என்னை குருவாக ஏத்துகிட்டதால்தான் இந்தப் பிரச்சினை. அவங்களுடைய குடும்பத்தில் பிரச்சினை. இதைச் சரி செய்யாமல் என்னை உள்ளே இழுத்துவிட்டிருக்காங்க. நான் சொன்னால், அந்த அம்மா கேட்பாங்க என்ற ஒரே காரணத்தில்தான் இந்த மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தம்மாவும், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்திற்கு போயிருக்காங்க. இதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்...?'' என்று நழுவினார்.

மந்திரத்தால் மாங்காய் பழுக்காது என்பார்கள். அதை உணர்ந்திருந்தால் குடும்பத்தை இழந்திருக்கமாட்டார்கள் அபிராமி குடும்பத்தினர்.                          

ad

ad