புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


விமானத்தின் பாகங்கள் இலங்கை அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு, மலேசிய விமானத்தினுடையதா?
விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சில இலங்கை அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு
தெரிவித்துள்ளது.
சிதைவுகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்து விமானப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மலேசிய விமானத்தினுடையதா ?
இது மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்கிற ஐயம் தம்மிடம் உள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள் அதன் அமைப்பு மற்றும் அதனது தன்மையினை பார்க்கும் இடத்து அவ்வாறு உள்ளதாக கூறும் மீனவர்கள் குறித்த சில்லை மீட்டுள்ளனர்.
குறித்த சில்லு மொரகொல்ல சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சில்லு தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
விமானப் பாகத்தில் உள்ள குறியீட்டை வைத்துக் பார்க்கும் போது AN ஏன்ற குறியீடு அன்ரனோவ் விமானத்தைக் குறிப்பதாகவே அநேகம் அமையும் எனவும் எனவே இந்தப் பாகம் ரஸ்யத் தயாரிப்பான அன்ரானாவோ விமானத்தின் பாகமாக இருக்கலாம் எனவும் அன்ரனோவ் ரக விமானங்கள் அநேகமானவை இலங்கையில் விமானப்படை மற்றும் பொதுப் போக்குவரத்துப் பாவனையிலுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக Antonov 210 ரக விமானத்திற்கான பாகமாக இது இருக்கலாம் எனவும் எனினும், இது ஏனைய ரக அன்ரானோ விமானங்களிற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ad

ad