புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

கோவன் கைதுக்கு எதிரான போராட்டம்: போலீஸ் கெடுபிடி; மண்டை உடைப்பு! ( வீடியோ)

பாடகர் கோவன் கைதை கண்டித்து  திருச்சியில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்
THX VIKATAN  இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் இருவருக்கு மண்டை உடைந்தது

மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன், "மூடு டாஸ்மாக்கை மூடு" , "ஊருக்கு ஊர் சாராயம் தள்ளாடுது தமிழகம்"  உள்ளிட்ட இரண்டு பாடல்களை பாடி,  அதை சமூக வலைதளங்களில் விட இது தொடர்பாக கடந்த 29-ம் தேதி நள்ளிரவு அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
 
விழிப்புணர்வு பாடல் மூலம் மக்களை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது தேச விரோதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில்,  மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவனை விடுதலை செய்யவும் , மதுக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தியும்   மக்கள் கலை இலக்கிய கழகம் போராட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில்  மைக் பயன்படுத்தக்கூடாது, பாட்டுப்பாடக்கூடாது, இசைக்கருவிகள் பயன்படுத்தக்கூடாது எனப்து உள்ளிட்ட 12 வகையான நிபந்தனைகளை விதித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியது காவல்துறை. போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

ஆத்திரம் அடைந்த போலீஸார், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை, குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இறுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 106 பேரை கைது செய்தனர். வேனுக்குள் ஏற்றிய பிறகும் மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும், காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
“தொடர்ச்சியாக பாடகர் கோவனை விடுவிக்க கோரி போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் கோவன் மீது வழக்குகள் அடுத்தடுத்து புதிது புதிதாக கூடிக்கொண்டே போகிறது. இதை கண்டிப்பவர்கள் மீது தடியடி நடத்துகிறது காவல்துறை. டாஸ்மாக்குக்கு எதிராக போராடினால் இதுதான் கதி என அரசு எச்சரிக்கிறது” என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ad

ad