HNDA மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன
பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிகின்றன.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.