மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியால் சிறியரக வாகனம் பயணம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த வீதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
எனினும் வெள்ள நீர் வரத்து குறைவடைந்தால் சிறியரக வாகனம் செல்லமுடியும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன