இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைபுலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம்
பொறிக்கப்பட்டுள்ள கார் ஒன்று தமிழ்நாட்டில் வலம் வந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புலிகள் இயக்கம் இன்னமும் தடை செய்யப்பட்ட நிலையில் பிரபாகரனின் படம் காரின் முன்பக்கத்தை அலங்கரித்த குறித்த காரை தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உரிமையாளர் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பிலான விபரம் வெளியிடப்படவில்லை.