புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

பிரித்தானியாவில் வரலாறு காணாத மூடுபனி: வெளிச்சமே இல்லாத நிலையில் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் நிலவும் மூடுபனி காரணமாக ஓடுபாதைகள் தெரியாததால் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக சாலையில் எதிரில் வரும் வாகனம் கூட கண்களுக்கு தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்துள்ளது.
இதனால் சாலையில் செல்வோர் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த பனியின் காரணமாக விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதை சரியாக தெரியாத காரணத்தினால் விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ரோம் நகரில் இருந்து கட்விக் விமானநிலையத்துக்கு வந்த விமானம் ஒன்று கடும் பனியினால் தரையிறங்க முடியாமல் சிரமப்பட்டது.
முற்றிலும் பனி சூழப்பட்ட அந்த நிலையில் விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியோவை அந்த விமானத்தின் விமானி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில் கடும் பனிபொழிவு காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad