புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

சரியான நேரத்தில் முஸ்லிம்களை தமிழ் மக்கள் காப்பாற்றினர்- வலம்புரி


எண்பது வீதத்தை 12 வீதம் எதிர்த்தால், 12 வீதத்தை எட்டு வீதம் ஏன் எதிர்க்கக்கூடாது. இப்படிக் கேள்வி எழுப்பியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.
80 வீதமான சிங்கள மக்களை 12 வீதமான தமிழர்கள் எதிர்க்கின்ற போது, 12 வீதமான தமிழர்களை 8 வீதமான முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கக் கூடாது என்று ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியதற்குள் தமிழர்கள் தொடர்பில் முஸ்ஸிம் அரசியல் தலைமையிடம் இருந்த காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது.
வடபுலத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையால் அவர்கள் தமிழர்கள் மீது கோபம் கொண்டிருக்கலாம் என்று கருதுவதும் பொருத்தமுடையதன்று.
ஏனெனில் விடுதலைப் புலிகளுடன் ரவூப் ஹக்கீம் உடன்படிக்கை செய்தவர். விடுதலைப் புலிகளை ஏற்று இணங்கிக் கொண்ட ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தமை அவ்வளவு நல்லதல்ல.
வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகப்பெருமெடுப்பில் தமிழின அழிப்பு நடந்த போது, முஸ்லிம் மக்கள் அந்தக் கொடூரத்தைக் கண்டித்திருக்க வேண்டும்.
இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடூரங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அமைப்புகளும் குறைந்தது தமது வருத்தத்தையேனும் வெளிப்படுத்தவில்லை.
இது தவிர, இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்திய போது, அதற்கு எதிராக-இலங்கை அரசுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் பிரசாரம் செய்தார். இலங்கை அரசுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் ஹக்கீம் உதவினார்.
எனினும் இன்று வரை தமிழ் மக்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இருந்தும் சிறுபான்மைத் தமிழினத்திற்கு இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்கள் நிச்சயம் உதவி செய்திருக்க வேண்டும்.
பரவாயில்லை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து செயற்படுவதே புத்திசாலித்தனமானது என்று கருதிய முஸ்லிம் தலைமைகளுக்கு தாங்கள் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச மிகத் தெளிவாகக் காட்டியிருந்தார்.
ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்­சவுக்கு முஸ்லிம் மக்கள் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் போன்றவர்களை மிக மோசமாக அவகெளரவப்படுத்தினார்.
தமிழ் மக்களை கடுமையாக எதிர்த்த மகிந்த ராஜபக்­சவுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சேர்ந்து செயற்பட்டன. இருந்தும் அதற்கான பாடத்தையும் அவர்கள் மகிந்தவிடம் கற்றுக் கொண்டனர்.
ஆனால் ஒன்றை மட்டும் அடித்துக் கூறமுடியும். அதாவது முஸ்லிம் மக்கள் மீது தமிழர்கள் வெறுப்புக் கொண்டிருந்தால்-அவர்களை பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அதனை மகிந்த ராஜபக்­ மூலமாக செய்திருக்க முடியும்.
ஆம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்­சவை ஆதரித்திருந்தால், அவரே ஜனாதிபதியாகியிருப்பார். அவர் ஜனாதிபதியானால் முஸ்லிம் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் சொல்லி எவரும் அறியவேண்டிய தேவை இருந்திருக்காது.
தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததால் இலங்கையில் முஸ்லிம் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட்டது.
இந்தப் பேருதவியைச் செய்தவர்கள் தமிழ் மக்கள் என்பதை முஸ்லிம் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

ad

ad