புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த ஆதரவு அணி தீர்மானம்


இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது.
இதன்படி முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் இரண்டாம் கட்ட நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ஜெனிவாத் தீர்மானத்திலுள்ள ஆபத்து தொடர்பில் கிராமப்புற மக்களுக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வகட்சி மாநாட்டுக்கும் எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
ஜெனிவாத் தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டுமானால், நாட்டில் சட்டம் இயற்றப்படவேண்டும். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். உயர்நீதிமன்றம்வரை செல்வோம்.
இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்

ad

ad