2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், கீழ்நீதிமன்ற விசாரணை முடிவடையும் நிலையில் குறுக்கிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.