புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

கட்டார் நாட்டின் செம்பிறை சங்க உதவியுடன் மன்னார் எருக்கலம்பிட்டி ,கொண்டச்சி வீடுகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கட்டார் நாட்டின் செம்பிறை சங்கத்தின் திநி உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் 44 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு புதிய கடைத்தொகுதிகள் இரண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி கிராமத்தில் 70 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு 4 கடைத்தொகுதிகள், இரண்டு குடி நீர்த் தொகுதி, பள்ளிவாசல் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் கட்டார் செம்பிறை சங்கத்தின் ஆசிய தலைவர் வைட் ஹிஜானி, கட்டார் செம்பிறை சங்க தலைவரின் ஆலோசகர் அலி ஆடில், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச்செயலாளர் என்.எம்.முனவ்பர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து குறித்த வீட்டுத்திட்ட தொகுதியினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

ad

ad