முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இந்தப் பயணத்தை சாக்காக வைத்து, எமது மக்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் பல்வேறு நிகழ்வுகளை நான் ஏற்பாடு செய்திருந்தேன்.
ஜனாதிபதி மாத்திரமல்ல, தென் பகுதியில் இருந்து ஏனைய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற போதும், வெளிநாட்டு பிரமுகர்கள் வருகின்ற போதும் அச் சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அச் சந்தர்ப்பங்களை எமது மக்களுக்குச் சார்பானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
எனினும், ஒரு சாரார் - அதாவது தாங்கள் எதுவும் செய்யாது, ஏனையவர்களையும் எதனையும் செய்ய விடாது இருப்பவர்கள் - (இவர்களுக்கென ஒரு பழ மொழியும் கூறப்படுவதுண்டு) ஜனாதிபதியின் இந்தப் பயணத்தைப் புறக்கணித்தனர். புறக்கணிக்குமாறு எமது மக்களையும் கேட்டுக் கொண்டனர்.
எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு எமது தேவைகளைப் பெற முன்வருமாறு நாம் எமது மக்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்ற மக்கள,; அன்றைய தினம் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் பெருவாரியாகக் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தின்போது அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை யாழில் நடத்த தகுந்த மண்டபம் இல்லாத காரணத்தால் அதனை கிளிநொச்சியில், இராணுவ முகாம் மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு இருந்தது.
இதனை ஏற்றுக்கொள்ளாத நான் அக் கூட்டம் யாழ்ப்பாணத்தில், வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட வேண்டும் என்றேன்.
இதற்கொரு காரணம் இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீரசிங்கம் மண்டபத்தை புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது எண்ணம்!
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீரசிங்கம் மண்டபத்தை புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது எண்ணம்!
இறுதியில் எனது இந்த எண்ணம் நிறைவேறியது. சுமார் 10 மில்லியன் ரூபாவிற்கு அதிகச் செலவில் வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்பட்டு இன்று புதுப்பொலிவுடன் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.