புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கின் சாட்சிகளை சந்தேநபர்கள் மிரட்டுவதாக கூறப்படுவதனாலேயே இந்த வழக்கை கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விசேட காரணங்களின் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரித்தானியப் பிரஜையின் கொலை தொடர்பில் தங்காலை பிரதேச சபைத்தலைவர் உட்பட பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25ம் திகதி தங்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் பிரித்தானிய பிரஜையான குரும் ஷேக் என்ற செஞ்சிலுவை சங்க தொண்டர் சேவையாளர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2ம்இணைப்பு
வெளிநாட்டு சதி பலிக்காது: பிரிட்டிஷ் பிரஜை கொலைச் சந்தேகநபர்
இலங்கையில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேகநபரான ஆளுங்கட்சி அரசியல்வாதி, 'இலங்கை அரசை கவிழ்க்க எடுக்கப்படும் சர்வதேச முயற்சி பலிக்காது' என்று கூறியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என்றும் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபைத் தலைவரும் ஆளுங்கட்சி அரசியல்வாதியுமான சம்பத் பத்திரண ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த வழக்கு முன்னர் தங்காலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டது.
இந்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தங்காலை பிரதேசசபைத் தலைவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கு எதிரான இந்த வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் விடுத்த வேண்டுகோளின்படியே விசாரணை கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கை கொழும்பில் தொடர்ந்து விசாரிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிசார் நீதவானிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி, தங்காலை பிரதேசசபைத் தலைவர் சம்பத் பத்திரண உத்தியோகபூர்வ வேலையாக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு நீதவான், பிணை வழங்கிய மேல்நீதிமன்றத்திடம் அது தொடர்பான கோரிக்கையை முன்வைக்குமாறு தெரிவித்துவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே, தன்மீதான குற்றச்சாட்டுக்களை நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று சம்பத் பத்திரண விமர்சித்தார்.
தெற்கே, தங்காலையில் கடந்த 2011-ம் ஆண்டு நத்தார் பிறப்பன்று இரவு பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கேளிக்கை விடுதியொன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது நண்பியான வெளிநாட்டு யுவதியும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad