புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள்
மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

ad

ad