வாலிபர் எரித்து கொலை! தளி-யில் மீண்டும் பரபரப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் அருகாமையில் பைரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை அருகாமையில் 35 வயது உள்ள வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பம் தளி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
காரணம் உடல் முழுவதும் எரிந்து தீகரையாக காணப்படுவதால் அடையாளம் காணப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தளி டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இறந்தவரிடன் உடல் ஓசூர் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.