நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் நளினி. அவர் மீது நான்குக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு கத்தி, சிம் கார்டு வைத்திருந்ததாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், 1ஆவது நடுவர்மன்ற நீதிபதி வரும் ஜூலை 29ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.