விஜயகாந்த் நன்றியுடன் நடந்திருந்தால் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் :
அமைச்சர் கே.வி.இராமலிங்கம்
அமைச்சர் கே.வி.இராமலிங்கம்
பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மத்திய ஆட்சியில் இருந்து விலகுவதாக அறி வித்த திமுக தலைவர் கலைஞர், தனது மகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். அவரது கபட நாடகத்தை தமிழக மக்கள் தெரிந்துவைத்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பித்ததுபோல, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். திமுகவுடன் ரகசிய கூட்டணி அமைத்ததால் தேமுதிக வேட்பாளர் தோற்றதாக விஜயகாந்த் கற்பனை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் நன்றியுடன் நடந்திருந்தால் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். நன்றியை மறந்ததால் அவருக்கு தோல்வி கிடைத்துள்ளது’’ என்றார்.