அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று
அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு இன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். பின்னர் அது தொடர்பில் கூட்டமைப்பின் தீர்மானம் குறித்து இன்றைக்கே ஊடகங்களுக்கும் அறிவிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.
இந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈபீஆர்எல்எப் கட்சிகளின் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.