புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013




பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது "பெண் வன்கொடுமை' தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட... அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை கைது செய்து ரிமாண்டும் செய்துவிட்டனர் கிண்டி மகளிர் போலீசார்.

தன்னுடைய "டிரேட்' மார்க் சிரிப்பை தொலைத்து கோபக்கனலுடன் உமா புகார் தரும்படி என்னதான் நடந்தது? தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசினோம்.

""சமீபகாலமாகவே சரவணராஜன் நடத்தி வருகிற "ஆல்பம்' புரோகிராமை தலைமை விரும்பவில்லை. பல முறை மறைமுகமாக இதை நிறுத்தும்படி சரவணராஜனிடம் சொல்லிப் பார்த்துள்ளனர். அவர் கேட்பதாகத் தெரியவில்லை. மேலும் ஜோதிடம் உள்ளிட்ட சில "ஸ்லாட்'கள் இப்போதைக்கு தேவையில்லை என்று காலி செய்த ரபிபெர்னார்ட்தான் இதையும் செய்கிறார் என்று அவரிடமே வம்புக்குப் போயிருக்கிறார் சரவணராஜன். தலைமை நிருபராக இருந்து கடந்த 23-ந்தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட ரமணி பற்றியும், சரவணராஜன் பற்றியும் "என்னை மதிப்பதில்லை' என்று ரபி, கம்ப்ளைண்ட் செய்திருந்தாராம். இப்படி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நிலையில்தான் சரவணராஜனிடம், அடுத்த புரோகிராம் பற்றி வம்படியாக தொடர்ந்து பெப்சி உமா நச்சரிப்பு செய்து கொண்டிருந்தார். இதனால் வெறுப்பான சரவணராஜன் தன் அறைக்கு அவரை வரவழைத்து திட்டிய தோடு, ஓப்பனாகவும் பொதுவில் திட்ட ஆரம்பித்துவிட்டார். எஸ்.எம்.எஸ். மூலமும் ஏடாகூட மாய் திட்டிவிட்டார். அதுதான் உமா கொடுத்த வன்கொடுமை புகாருக்கு ஆதாரமான எஸ்.எம். எஸ். ஆக மாறிவிட்டது'' என்கின்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ""ஆதம்பாக்கம் அட்ரஸ்லயிருக்கற சரவண ராஜனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டு காட்டணும்னு மட்டும்தான் எங்களுக்குத் தகவல். யாரு புகார் கொடுத்தாங்க, என்ன நடந்ததுங்கறது எதுவுமே தெரியாது. எல்லாமே ஆகாய மார்க்கமா டிராவல் பண்ண மாதிரிதான்.... கிண்டி ஆல் வுமன் போலீசுக்கு மட்டுமில்ல, அங்க கோர்ட் டியூட்டி பார்க் கற போலீசுக்குக் கூட இதப்பத்தி தகவல் ஏதும் தெரியாது... ஹை-லெவல் டீலிங் சார்'' என்றனர். ஆல்வுமன் மற்றும் கோர்ட் டியூட்டி போலீசாரிட மும் பேசினோம். அவர்களும் இதையேதான் ஒப்பித்தார்கள்.

""எக்ஸ் மாணவரணி மாநிலச் செயலாளரும் எம்.பி. வேட்பாளரா இருந்து காலி செய்யப்பட்டவருமான சரவணப் பெருமாளுக்கும், தலைமை நிருபர் ரமணிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. ரமணியும் சரவணராஜனும் ரொம்ப க்ளோஸ். இப்படி பல "யு' டர்ன் விவகாரங்களும் இப்ப நிர்வாகத்துக்கு பவர்ல வந்திருக்கிற சசி குரூப்புக்கு தெரிய வரவேதான் அவங்க ஜெ.கிட்ட சொல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திட்டாங்க. ஏற்கனவே ஜெ. கலந்துகிட்ட டெல்லி புரோகிராமை "அவுட் ஆஃப் ஃபோகஸ்'சா காட்டியும் திருச்சி பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டு விட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. ஆக எல்லாமும் மொத்தமா சேர்ந்துட்டது தான் இப்படியான ரிசல்ட்டாயிடுச்சு'' என்கின்றனர் நம்மிடம் பேசிய ஜெயா டி.வி.யில் உள்ள சிலரே...


பெப்சி உமாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தும், தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் என்னை திட்டியும், விமர்சனம் செய்தும்
பலர் முன் னிலையில் சரவணராஜன் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். பலமுறை நான் இதைக் கண்டித்து எச்சரித்தும் அவர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாததால் புகார் செய்தேன். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது'' என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

பெப்சி உமாவின் நட்பு வட்டத்தில் பேசினோம். ""சான்ஸ் கேட்டு சரவணராஜன்கிட்ட நச்சரிக்கிற அவசியம் உமாவுக்கு இல்லே. தன்னோட சைடு தப்பை மறைக்க சரவணராஜனோட ஆளுங்க விடற கதை இது. அவரோட டார்ச்சரை ரொம்ப நாளா பொறுத்துப் பொறுத்துப் பார்த் துட்டு முடியாமதான் இப்படி ஒரு புகாரை அவங்க (உமா) கொடுத் தாங்க. அடுத்தடுத்து இப்படி பல புகார்கள் இனிமேல் வரப் போகுது பாருங்க... அப்ப தெரியும் சரவண ராஜன் யாருன்னு'' என்று பொடி வைக்கின்றனர்

ad

ad