புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013


அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
 




முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad