இயக்குநர் பாரதிராஜா வீட்டு முன் போராட்டம்
தேனியில் உள்ள என்.ஆர்.டி நகரில் உள்ளது இயக்குனர் பாரதிராஜாவின் வீடு. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில்,
தேவர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் பாரதிராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.