புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

கொழும்பில் இன்று ஒரு வழி போக்குவரத்து ஒத்திகை

மருதானை பாலம் சந்தி தொடக்கம் தொழில்நுட்பக் கல்லூரி வரை, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம்
சந்திவரை, ஒரு வழி போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று 29ஆம் திகதி மற்றும் நாளை 30ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
இத்தினங்களில் காலை 8மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை வீதி மற்றும் ஆமர்வீதியில் இருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தையில் பஞ்சிகாவத்தை வீதிக்குள் நுழைந்து எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு அருகில் தெற்காக திரும்பி டெக்னிகல் சந்தியில் வலது பக்கம் திரும்பி புறக்கோட்டை செல்ல முடியும்.
காமினி சுற்றுவட்டம் மற்றும் புஞ்சி பொரளை திசையில் இருந்து ஆமர்வீதி மாளிகாவத்தை பகுதிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக டெக்னிகல் சந்திக்குச் சென்று தெற்காக திரும்பி சங்கராஜ மாவத்தை வீதியில் பயணித்து ஆமர்வீதி மாளிகாவத்தையை அடைய முடியும்.
புறக்கோட்டை மற்றும் நீதிமன்ற திசையில் இருந்து காமினி சுற்றுவட்டம் அல்லது பொரளைக்கு வரும் வாகனங்கள் நேரடியாக சங்கராஜ சுற்றுவட்டம் வரை சென்று அங்கு பஞ்சிகாவத்தை வீதி ஊடாக மருதானை பாலம் சந்திக்கு வந்து புஞ்சிபொரளை அல்லது காமினி சுற்றுவட்டம் திசைக்குச் செல்லமுடியும்.
தொழில்நுட்பக் கல்லூரி சந்தியில் நீதிமன்ற வீதி மற்றும் பாலம் சந்தியை தாண்டி காமினி சுற்றுவட்டம் திசைக்கு வாகனங்களை செலுத்த முடியும்.
மாளிகாவத்தை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ சுற்றுவட்டத்தை தாண்டி பின் ஆமர்வீதி திசைக்குச் செல்லமுடியாது. அவ்வாறு வரும் வாகனங்கள் கெத்தாரா வீதி பபாபுள்ளே வீதி ஊடாக கிரேன்பாஸ் மாவத்தை வழியாக ஆமர் வீதியை வந்தடைய முடியும்.
எனவே எதிர்வரும் இரு தினங்களில் மேற்கூறியவாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

ad

ad