வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.வடக்கு தமிழ் மக்களுக்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
டி.டி. ரி.வி என இந்த அலைவரிசைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பக்கச்சார்பின்றியும் சுயாதீனமாகவும் செய்திகளை வெளியிடும் நோக்கில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.