புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்


சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர்....
இதன்போது உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்தும் விதம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், உள்ளுராட்சி சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவது தொடர்பில் காணப்படுகின்ற நெருக்கடிகளை விளங்கப்படுத்தினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எல்லை நிர்ணயம் தொடர்பில் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட ஓர் உறுதிமொழியாகும். எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதுவொரு பகுதியாக இருந்தது.
எதிர்வரும் வருடம் உள்ளுராட்சி சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். நாடாளுமன்றத்தில் இன்று இரு உறுப்பினர்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு முன்னதாக இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள்.
இதற்கு பதிலளித்த நான் தமிழ், சிங்களப் புத்தாண்டிற்கு முன்னதாக தேர்தலை நடத்த உத்தேசித்திருக்கின்றோம் என்றேன். ஆவ்வாறு செய்தால்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் கிடைக்கும்.
தேர்தல் முறை என்பதை அடுத்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதன் பின்னர் திருத்தங்களுடன் அதனை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் - என்றார்.

ad

ad