12 டிச., 2015

யாழில் 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாலி வடக்கு பிரதேசத்தில் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த கிணற்றில் குறித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.
08 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.