12 டிச., 2015

மஹிந்த தரப்புடனான பேச்சுவார்தை தோல்வி! அரசாங்கத்தில் இணைவுள்ள மனுஷ, கீதா


காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 19அம் திகதி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மனுஷ நாணயக்கார மற்றும் கீதா குமாரசிங்க ஆகிய முன்னணியின் உறுப்பினர்கள், மைத்திரி அணியில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கூட்டு எதிர்கட்சியில் தக்க வைத்து கொள்வதற்காக மஹிந்த தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இந்த இரண்டு உறுப்பினர்களும் தனிப்பட்ட நோக்கத்திற்கமையவே அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
தான் அரசாங்கத்தில் இணைவதற்கு அமைச்சு பதவி ஒன்று அவசியம் என மனுஷ நாணயக்கார கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கீதா குமாரசிங்கவின் அமைச்சு பதவி இழக்கப்படும் அறிகுறி காணப்படுவதனால் அவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.