12 டிச., 2015

சுவிஸ் தேசிய பாராளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி விவாதம்

தமிழ் அரசியல் மற்றும் போர்க்காலக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையானது மிகவும் வேகமாகவும் விணைத்திறனுடன் செயற்பட்டுவருகிது.

பல சொல்லமுடியாத துன்பங்களோடு 20 வருடத்திற்கும் மேலக சிறைகளிலும், சித்திரவதை முகாம்களிலும் திவித்துவரும் எமது குற்றமற்ற உறவுகள் அணியில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அரசாங்கம் வழங்கியுள்ள சில வதக்குறுதிகளை அடுத்து எதிர்வரும் 13.12.2015 வரை தற்களிகமாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த மனித அவலம் தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவை சுவிஸ் பாராளுமன்றத்திற்கும், ஊடகங்களிற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தது. ஆதன்போது சுவிஸ் சோசலிச சனநாயகக் கட்சி பணிகால (wintersession 2015) பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடையத்தை பேசுபொருளாக்குவதாக உறுதியளித்தது.
அதற்கமைய நாம் இவ்விடையம் தொடர்பாக கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் நிலைப்பாட்டை கோடிட்டுக்காட்டி பிரேரணை ஒன்றை தயாரித்து முன்மொழிந்தோம். இவ்விடையத்தை சுவிஸ் சோசலிச சனஞாயகக் கட்சியின் St. Gallen மாநில பாராளுமன்ற உறுப்பினர் .Frau Friedl அவர்கள் பாராளுமன்ற அவசரகால மனுத்தாக்கலும் பதில்கோரலும் என்ற பாராளுமன்ற செயல்முறைக்குள் கீழ்ப்படுத்தி கீழ்வரும் 2 கேள்விகளையும் சுவிசின் தேசிய சமஸ்டி அரசாங்கத்தை (Bundesrat) நோக்கி கேள்வியெளுப்பியுள்ளார்.
பல கிழமைகளாக சிறீலங்காவில் தமிழ் அரசியல் மற்றும் போர்காளக் கைதிகள் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். ஆப்போராட்டம் தற்காலிகமாக எதிர்வரும் 13.12.2015 மட்டும் கைவிடப்பட்டுள்ளது. இக்கைதிகள் 20 வருடத்திற்கும் மேலக எக்குற்றங்களும் நிரூபிக்கப்படாமலும், சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் நீதிக்கு புறம்பாக சிறைகளிலும், இரகசிய தடுப்புமுகாம்களிலும் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
Seit mehreren Wochen führen tamilische politische und Kriegsgefangene in Sri Lanka einen inzwischen bis 13.12. unterbrochenen Hungerstreik für ihre Freilassung. Sie sind teils seit mehr als 20 Jahren ohne Anklage oder Urteil auch in geheimen Gefägnissen inhaftiert.
Setzt sich der Bundesrat für unabhängige Besuche aller dieser Gefangenen ein?
சுவிஸின் தேசிய சமஸ்டி அரசு இவ் அனைத்துக் கைதிகளையும் சுயாதீனமாகச் சென்று பார்வையிடுவதற்கான வழியமைக்கும் பணிகளை மேற்கொள்ளுகிறதா?
Setzt sich der Bundesrat bei der Regierung von Sri Lanka für eine bedingungslose Generalamnestie und Freilassung aller politischen und Kriegsgefangenen ein?
சுவிஸின் தேசிய சமஸ்டி அரசானது இவ் அனைத்து அரசியல் மற்றும் போர்க்கைதிகளும் நிபந்தனையற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்படுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா?
இக் கேள்விகள் அவசரகால மனுத்தாக்கலும் பதில்கோரலும் என்ற பாராளுமன்ற செயல்முறைக்குள் கீழ்ப்படுத்தி கேட்கப்பட்டுள்ள காரணத்தால் எதிர்வரும் திங்கள்கிழமை (14.12.2015) ஆம் திகதிக்கு முன் சுவிஸின் தேசிய சமஸ்டி அரசு (Bundesrat) எழுத்துமூலம் பதிளளிக்கவேண்டியுள்ளது.
இத் தருனத்தில் எமது தேவைகளை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லி, தட்ட வேண்டிய இடத்தில் தட்டி அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் ஒருமித்த மக்கள் சக்தியாக முன்னெடுத்துச் செய்வதற்கு அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும், அரவணைப்பையும் வேண்டிநிற்கிறோம்.  ஆத்துடன் ஊடகங்களின் பேராதரவையும் வேண்டி நிற்கிறோம்.