புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி

2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள் குடும்பத்தை இதுவரை காணவில்லை என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.

எனது மகளான சசிகலா, மருமகன் பரமேஸ்வரன், பேரன் பிரதீபன், பேத்தி பிரியாளினி, அதுமட்டுமல்லாது ஏழு வயது நிரம்பிய பேரன் பிறை அழகன் போன்றோர் இறுதிக்கட்டப் போரில் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களை இராணுவத்தினர் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றதாக சிலர் எனக்கு தெரிவித்தனர். அத்துடன் எனது மகளின் குடும்பத்துடன் 10 குடும்பங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக சிலர் குறிப்பிட்டனர்.

;அதன்பின்னர் நாங்கள் தேடி அலையாத இடம்இல்லை. இராணுவ முகாம்கள் எல்லாம் அவர்களை தேடி அலைந்தும் அவர்கள் தொடர்பில் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எமக்கு கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் கடவுளின் அருளால் எனது மகள் குடும்பம் திரும்பி என்னிடம் வரும் என்று தாயார் சாட்சியத்தில் தெரிவித்தார்.

ad

ad