12 டிச., 2015

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும் எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாது என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை அறிவுறுத்தினார்.

யாழ்.குடாநாட்டிற்கு நேற்றைய தினம் வருகைதந்த இந்தியத் தூதுவர் இன்று  வட மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார் இச் சந்திப்பின் போதே மேற்படி வேண்டு கோள் ஒன்றினையும் முன்வைத்ததோடு வேறு பல விடயங்களையும் உரையாற்றியதாக  வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களிற்கு  தெரிவித்தார்.

இச் சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த முதலமைச்சர்,
 இந்தியத் தூதுவர்  தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு என்று புதிய அரசியல் யாப்பிற்கு நடவடிக்கை இடம்பெறுகின்றது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அரசியல் யாப்பில் என்ன நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியுமோ அவற்றைப்பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒருமித்து செயலாற்ற வேண்டும் உங்களிற்குள் உள்ள முரண்பாடுகளை பிறர் அறிந்தால் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவர் என்றும் உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாக கட்சி உடையக் கூடும் என கொழும்பில் உள்ளவர்கள்  கருதுகின்றனர். அதனால் எந்த விதத்திலும் எப்பொழுதும் பிரிந்து கொள்ளும் நிலைக்கு வரக்கூடாது என்றார்.

இதற்குப் பதிலளித்த நான்,அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் எமது பிரச்சனைகள் தொடர்பில் எமக்கு போதிய அறிவும் அனுபவமும் உண்டு . அவற்றினை உரியவாறு தெரியப்படுத்துவோம். இதற்கு வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் அதேபோல் கருத்து முரண்பாடு என்பது ஏதும் கிடையாது. கட்சி உடைந்து போகக் கூடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. எந்த விதத்திலும்- எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாது. அதை நானும் வரவேற்கிறேன் என்று பதிலளித்தேன் என்றார்.