12 டிச., 2015

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 197 ஓட்டங்களுடன் இலங்கை

Angelo-Mathews-of-Sri-Lanka-bats31இலங்கை – நியூஸிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ளை பெற்றுள்ளது. இலங்கை அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில், கருணாரத்ன 198 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டங்களையும் சந்திமால் 208 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) டியூநிடிந்தில் ஆரம்பித்து நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் பேட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 96.1 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றிருந்தது.