புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல் டெல்லியில் கைது

சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில்
தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.  உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மிக கொடூரமான தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தியுள்ளனர்.இந்தியாவில் இருந்து 23 பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 6 பேர் கொல்லப் பட்டு விட்டனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர செல்ல முயன்ற 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தடுத்து நிறுத்தபட்டு உள்ளனர்.  

பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இந்த இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது.  ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது.  தமிழக இளைஞர்கள் 2 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்தபோது துருக்கியில் பிடிபட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர

இந்த நிலையில் தென் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மூளை சலவை செய்து கவர்ந்து வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. அதன்பேரில் மத்திய விசாரணைக் குழு தீவிரமாக கண்காணித்து, 

இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி அழைக்க முடியாது என்பதை உணர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி கள் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தென் இந்திய இளைஞர்கள் மீது பார்வையை திருப்பி யுள்ளனர். அவர்களது இந்த முயற்சிக்கு சென்னையைச் சேர்ந்த 23 வயதான முகம்மது நசீர் என்ற வாலிபர் ஏமாந்து மனதை பறி கொடுத்து விட்டது தெரிய வந்துள்ளது. முகம்மது நசீரின் தந்தை பக்கீர் முகம்மது துபாயில் உள்ள ஒரு கார் ஷோ-ரூமில் பணி புரிந்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு முகம்மது நசீர் துபாய் சென்று தன் தந்தையுடன் தங்கினார். சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்துள்ள அவர் துபாயில் அது தொடர்பான பணியை செய்து வந்தார். 

துபாயில் ஐ.எஸ். தீவிர வாத இயக்கத்துக்கு ஆள் திரட்டும் பணியில் ‘‘மேட் முல்லா’’ என்பவர் ஈடுபட்டு உள்ளார். அவருடன் ம் முகம்மது நசீருக்கும் எப்படியோ கடந்த மே மாதம் தொடர்பு ஏற்பட்டது. நசீரை மூளை சலவை செய்த முல்லா, அவரை சிரியாவில் நடக்கும் போரில் பங்கேற்க வருமாறு அழைத்தார். 
தவறான போதனைகளை நம்பி ஏமாந்த நசீரும் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து முல்லா சூடான்நாட்டு பால் போர்ட் ஒன்றை தயார் செய்து நசீருக்கு அனுப்பி னார். சூடானில் ஆயுத பயிற்சி பெற்ற பிறகு சிரியாவுக்கு நீங்கள் செல்லலாம் என்றும் நசீரிடம் முல்லா கூறியிருந் தார். 

இதையடுத்து சிரியா செல்ல தயாரான முகம்மது நசீர் கடந்த மே மாதம் சென்னை வந்து உறவினர்களை பார்த்து சென்றார். பிறகு அவர் துபாய் திரும்பிச் சென்று விட்டார். அங்கிருந்து அவர் சூடானுக்கு பயணமானார்.சூடானில் அவரது நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பதை சூடான் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து முகம்மது நசீரை சூடான் அரசு நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

அதோடு முகம்மது நசீர் திருப்பி அனுப்பப்படும் தகவலையும் மத்திய அரசுக்கு சூடான் நாடு தெரிவித்தது. அதன் பேரில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது நசீரை தேசிய விசாரணை குழுவினர் கைது செய்தனர். 

நசீரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வரு கிறார்கள். நசீர் கைது செய்யப் பட்டிருப்பதை தேசிய விசா ரணைக் குழு தலைவர் சரத்குமார் உறுதிபடுத்தி னார்.

ad

ad