12 டிச., 2015

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!

.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய்ப்பூரில்  இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்த சிராஜுதீன் என்பவர்,  ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மார்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு இந்தியாவில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. 

மேலும் அவரது வீட்டில் இருந்து சில சந்தேகத்துக்குரிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஆன்லைன் பதிப்பான 'தபீக்' இதழ்களும் , ஐ.எஸ். இயக்கம் தொடர்பான வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதையடுத்து சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிராஜுதீனை நேற்று ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.