12 டிச., 2015

யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை

யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது.

இதுதொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொழும்பிலிருந்து நேற்று(10) காலை 11.45 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் கனகராஜன்குளம் பகுதியில் புகையிரதப்பாதையில் நின்ற யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் புகையிரதம் பழுதடைந்தமையினால் மாங்குளத்துடன் தனது சேவையை நிறத்தியது இதனால் பயணிகளின் போக்குவரத்து தாமதமாகியது.
வருகைதந்த பயணிகள் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் செயற்ப்பாட்டால் விசேட பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான மக்கள் ஆனுப்பிவைக்கப்பட்டனர்.