12 டிச., 2015

வவுனியா முல்லைத்தீவில் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவி


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்
நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 147 பயனாளிகளுக்கான ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ஆயிரம் பெறுமதியான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தை, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் க.சிவநேசன், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.மோகன்ராஸ், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட செயலகத்தின் திட்ட பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
புனர்வாழ்வு பெற்ற விசேட தேவைக்குட்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இன்று வவுனியாவில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
வட மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியாவின் 3 பிரதேச செயலகங்களை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு இவ்வாறு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர், அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செ. மயூரன், வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.