புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி அணி? இன்று லயன்ஸ் அணியுடன் மோதல்
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி லயன்ஸ் அணியை சந்திக்கிறது.
இப்போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்திய பணக்கார பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகின்றார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளன.
இதன் போது கூட்டமைப்பின் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யை முதல்வராக்குவது எஸ்.ஏ.சி.யின் கனவு! போட்டு தாக்குகிறார் கே.ஆர்.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு அணியாகவும், கே.ஆர். ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதும், போலீசாரிடம் புகார் அளிப்பது,

உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கலைஞர் உருக்கம்



உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் போல் திமுக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபால் - சரோஜினி தம்பதியின் மகள் பாப்பு என்கிற ரம்யா, திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத்

கலைஞருடன் நாராணசாமி சந்திப்பு!அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை?
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் கலைஞரை இன்று (25.10.2012) சந்தித்தார்.

24 அக்., 2012

மாணவியின் முன் ஆடைகளைக் களைந்து நின்ற அதிபர்
மாணவியொருவரின் முன் தனது ஆடைகளைக் களைந்து ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்! 32 பேர் இறுதி நேரத்தில் தரையிறக்கம்
பிரித்தானியாவில் இருந்து விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் சற்று முன் இலங்கையை வந்தடைந்தனர் 



மாற்றான் விமர்சனம் :எழுதியவர் :அதிஷா 

வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாத

ி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...
கே.பியின் விடுதலை சர்வதேச சட்ட மீறல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேசக் குற்றவாளியாகக் கூறப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு நாட்டில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்.
இரா.சம்பந்தன்
கே.பி. தமிழரின் பிரதிநிதி அல்லர்-
தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான பேச்சைத் தொடங்குவதற்காக அரசின் சாதகமான சமிக்ஞையை எதிர்பார்த்திருக்கிறேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின்
கே.பியா? டக்ளஸா? அரசுக்குள் இழுபறி
வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
 விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும்
கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம்: கலிஸ்
சாம்பியன் லீக் தொடரிலிருந்து கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம் என கொல்கத்தா அணி வீரர் ஜக்யூஸ் கலிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா
சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்
நோர்வே சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக
தந்தை, தாய் மற்றும் மகனுக்கு மரணத் தண்டனை
புஸ்லாவ, ரம்பொடை பெரட்டாசி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தாய் மற்றும் மகனுக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய ரணிலே காரணம்: ஸ்ரீரங்க
நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச்
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்
பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன.
இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும்
பற்றை காடொன்றிலிருந்து மாணவியின் சீருடையும் சைக்கிளும் மீட்பு
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள பொற்கேணி கிராமத்திற்கு அருகில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி அணியக்கூடிய சீருடை மற்றும் பெண்கள் பாவிக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

23 அக்., 2012


துப்பாக்கி சுடும் போட்டியில் சிறிலங்காவுக்காக பங்கு பற்றும் புலிகள்

தேசிய துப்பாக்கிச் சுடும் அணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னார் போராளிகள் மூவர் தெரிவாகியுள்ளனர்.  இவர்கள், அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய பிராந்திய நாடுகளின் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி

கே.பி. மூலம் அரச உடமையாக்கிய புலிகளின் நிதி 20000 கோடி எங்கே?!– ஐ.தே.க கேள்வி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளியாக கூறப்படும் கே பி க்கு நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குமரன் பத்மநாதனின் 20000 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு என்னவாயிற்று எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
உதைபந்தாட்டப் போட்டியின் நடுவர் அடித்துக்கொலை: சிம்பாப்வேயில் சம்பவம்
உதைபந்தாட்ட போட்டியொன்றின்போது நடுவரொருவர் வழங்கிய தீர்ப்பினால் ஆத்திரமடைந்த ரசிகரொருவர் அவரைக் கொலைசெய்த சம்பவமொன்று சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.இச்சம்பவம் குறித்துத்
POINTS TABLE AND FULL POINTS

Delhi Daredevils
Titans
Titans won the toss and elected to field
Match delayed by rain
    Current time: 18:36 local, 16:36 GMT

    AUCKLAND OUT
    Perth Scorchers 140/7 (20/20 ov)
    Auckland 124/8 (20.0/20 ov)
    Perth Scorchers won by 16 runs
    கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்கள் இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
    கொழும்பு 7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: உதவிய நபருக்கு 35 வருட சிறைத் தண்டனை
    முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வைத்து கொலை செய்ய திட்டமிட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு உடந்தையாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு 35 வருடகால

    சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. ஆக்கலாந்து- பெர்த் அணிகள் மோதிய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கியது.
    முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.இப்போட்டியில் ஆக்லாந்து அணி தோற்றால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அரை இறுதிப்போட்டிக்கு தகுப்பெறும். இதில் ஆக்லாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணி டைட்டன்ஸ் அணியை கட்டாயம் ஜெயிக்க வேண்டும். 
     
     
    டி.ஆர். பாலுவுடன் மோதல்: கருணாநிதியுடன் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் சந்திப்பு
    தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கும், பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நடைபெற இருக்கும்



            துரை ஆதீனம் மடம் தொடர்பான வழக்கில் நித்திக்கு எதிராக தமிழக அரசு சாட்டையை சுழற்றிய நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியை நீக்கியிருக்கிறார் -NAKERAN

    சாம்பியன்ஸ் லீக்: பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் வெற்றி
    இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. 

    பாடகி சின்மயி புகார்! 2வது நபர் கைது!
    பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
    அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப்பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!
    இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார். பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக
    தற்போதைய செய்தி 
    தி . மு . க . இல் பாரிய குழப்பம் ,உயர் மட்டத்துக்குள் பிளவு ,கருணாநிதி தடுமாற்றம் 
    ரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், கட்டம் கட்டி விடுகின்றனர்-கருணாநிதி
    தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,(கனி மொழி குரூப் ) டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் (ஸ்டாலின் குரூப் ) இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, கனிமொஹி வீட்டுக்கு பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. 



    கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
    தேர்தல் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையொட்டி, கமுதி நீதிமன்றத்தில், நடிகர் பாக்கியராஜ் 22.10.2012 அன்று சரண் அடைந்தார்.
    கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை ஆதரித்து கமுதி, பெருநாழி ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் 2011-ம்

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே பட நாயகி சுபா பட்டேலா மரணம்
    ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா (21). பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர். 

     

    நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் பாக்யராஜை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவு. 

    நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண் அடையாததால், அவரை கைது செய்யும்படி போலீஸôருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்... 

    பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை
    சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Sydney Sixers won by 12 runs

    Chennai Super Kings won by 4 wickets (with 6 balls remaining)
    தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘மாற்றான்’ தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது. 

    நோர்வேயில் பழிவாங்கப்படும் வெளிநாட்டுப் பெற்றோர்
    ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இலங்கைத் தாய்மார் இருவரால் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தின் ஊடாக நோர்வே சிறுவர் காப்பகத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு சர்வதேசத்தின் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
    11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்கொடகாவல பகுதியில் தாயின் உதவியுடன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்டையும் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாய்க்கும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக

    கேபி வெளியில் இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா?- வாசுதேவ நாணயக்காரவிடம் நியாயம் கேட்ட தமிழ் அரசியல் கைதிகள்
    கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.

    13வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து ஜெயலலியாவுக்கு கடிதம் அனுப்பிய மன்மோகன் சிங்
     இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம்
    உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
    ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார்.
    உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார்.

    இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
    இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
    மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    அனைவர்க்கும் ஒரு அவசர வேண்டுகோள் :09248074010 (Toll Free)
    இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா.வில் நவம்பர் 1ஆம் தேதி மறுபரிசீலனை நடைபெறுகின்றது. இதற்காக 5 லட்சம் கையெழுத்துக்களை (மிஸ்டு கால்) அனுப்புவதன் மூலம் போர்க் குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையை வற்புறுத்த இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்போம். இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தமிழராகிய நாம் இதைச் செய்ய முடியும். தயவு செய்து உடனே செய்யுங்கள்.

    இதை செய்வதின் மூலமாக நாம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 
    குறிப்பு :ஒருவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Mobile (or)Land-line Numberல் இருந்து மிஸ்டு கால் கொடுக்கும்படி வேண்டுகிறேன் .

    22 அக்., 2012

    பு திய தலைமுறை தொலைகாட்சியில் இன்ற இரவு 17.30 மணிக்கு ஐ நா இல் இலங் கைக்கு எதிராக  புதிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பம் பற்றிய நிகழ்ச்சி .காணத் தவறாதீர்கள் இந்த இணையத்திலும் காணலாம .புதியதலைமுறை.கொம் www .  puthiyathalaimurai  .com 


    "மாவீரர் நாள் உரை' நிகழ்த்த வைகோ அடுத்த மாதம் லண்டன் பயணம்
    புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின், பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர்  மாதம் லண்டனில் நடக்கவுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ‌செல்கிறார்.
    தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்த நாளன்று, தொலைக்காட்சியில் தோன்றி,

    அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள்  கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.
    கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
    இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது

    இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ள ஆவணம் சட்டபூர்வமானது!- மொஹான் பீரிஸ்
    இலங்கை தயாரித்த மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டு திட்டம் சட்டபூர்வமானதொரு எழுத்து ஆவணம் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அவர், ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
    இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
    அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி, இராமநாதபுரத்திலுள்ள

    வவுனியாவிலிருந்து கண்டிக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
    கண்டி  பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காத்திருந்த பயணி ஒருவரை ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்ற முடிச்சுமாறி ஒருவர் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை வட்டவளைப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

    நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பினார்?- களுத்துறையில் சம்பவம்
    களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
    களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த சடலமொன்றை தமது தந்தையின் சடலம் என பிள்ளைகள் அடையாளம் கண்டு, அதனைப் பொறுப்பேற்று இறுதிக் கிரியைகள் செய்துள்ளனர்.


    நெட்டில் ஆபாச படம் பாடகி சின்மயி புகார் பேராசிரியர் கைது?

    இன்டர்நெட்டில் ஆபாச படம் வெளியிட்டதாக பாடகி சின்மயி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் கைது செய்யபடுவார் என்று தெரிகிறது. ‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் சின்மயி.
     தமிழ் தேசியக் கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் குழுவொன்று அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.   
    தமிழகத்திலுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது பற்றியும், அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்
    13 ஆவது திருத்தத்தை நீக்கினால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!
    13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமாகும். அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன்வைக்க வேண்டும்.

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்

    டென்மார்க் ஓபன்  பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஜூலியான் செங்கை சந்தித்தார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சாய்னா 21-17, 21-8  என்ற கணக்கில் ஜூலியான் செங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    நடிகை ஜோதிகா 35 வயது  பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினாசூர்யா மதுரையில் 'சிங்கம்-2' படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை
    நடிகை ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது. தனது பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.
    ஆசிரிய தகுதி தேர்வுக்கான விடைகள் இன்று வெளியிடப்பட்டது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
    தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் முறை நடந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்கள், புதியவர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
    சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி
    சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ்
    அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் . இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்து வட கிழக்கு பருவமழையும் தொடங்கி பெய்து வருகிறது.

    ad

    ad