புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012

உதைபந்தாட்டப் போட்டியின் நடுவர் அடித்துக்கொலை: சிம்பாப்வேயில் சம்பவம்
உதைபந்தாட்ட போட்டியொன்றின்போது நடுவரொருவர் வழங்கிய தீர்ப்பினால் ஆத்திரமடைந்த ரசிகரொருவர் அவரைக் கொலைசெய்த சம்பவமொன்று சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.இச்சம்பவம் குறித்துத்
தெரியவருவதாவது,
 
ம்பாப்வே நாட்டின் டகாவிரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை உதைபந்தாட்டப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
 
 
 
 
உள்ளூர் அணிகள் இரண்டிற்கிடையே இடம்பெற்ற இப்போட்டியானது ஆரம்பம் முதலே சுவாரஷ்யமாக இருந்துள்ளது.
 
இப்போட்டியில் ஐசாக் பொபானா என்ற 34 வயதான நடுவரொருவர் உதவி நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
 
இந்நிலையில் போட்டியின்போது அணியொன்று அடித்த கோலானது செல்லுபடியற்றதென ஐசாக் பொபானா தீர்ப்பளித்துள்ளார்.
 
குறித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் அங்கு பரப்பு ஏற்பட்டுள்ளதுடன் கோலினை அடித்த அணியின் ரசிகர்களுக்கும், உதவி நடுவரான பொபானாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
 
இதனையடுத்து ஆத்திரமடைந்த ரசிகரொருவர் கட்டையொன்றினால் நடுவரின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
 
சற்றும் எதிர்பாராத இவ் அடியினால் ஐசாக் பொபானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
பொபானாவைத் தாக்கிய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரைப் பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
 
ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ளூர் உதைபந்தாட்டப் போட்டிகளின் போது அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad