புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி அணி? இன்று லயன்ஸ் அணியுடன் மோதல்
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி லயன்ஸ் அணியை சந்திக்கிறது.
இப்போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிறது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 4 ஐபிஎல் அணிகள் கலந்து கொண்டன. ஆனால் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே வெளியேறி விட்டன. அரையிறுதிப்போட்டிக்கு டெல்லி அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி கிண்ணத்தை வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்தாண்டு மும்பை இண்டியன்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது. 2010 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கிண்ணத்தை வென்றது.
அதனால் இம்முறையும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான டெல்லி அணி கிண்ணத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
லீக் சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்காமல் 12 புள்ளிகளுடன் டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அவ்வணி வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அணியின் பலமான துடுப்பாட்ட வரிசை, எதிரணியிருக்குக் கடும் சவால் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
டெல்லி அணியில் வீரேந்தர் ஷேவாக், ஜெயவர்த்தனா, கெவின் பீட்டர்சன், ராஸ் டெய்லர், இளம் வீரர் உன்முகுந் சந்த் ஆகியோர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள்.
இவர்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த, எதிரணி பந்து வீச்சாளர்கள் பல்வேறு திட்டங்களுடன் களமிறங்கினால் மட்டுமே சாத்தியம்.
கடைசியாக விளையாடி போட்டியில் ஷேவாக் அரைசதமடித்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம்.
இர்பான் பதான், அகர்கர், மோர்ன் மோர்கல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரை டெல்லி அணி நம்பியுள்ளது.
அகர்கரின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான பந்து வீச்சு இந்த ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் டெல்லி அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.
சமபலம் நிறைந்த லயன்ஸ்: டெல்லி அணியுடன் ஒப்பிடுகையில் லயன்ஸ் அணி சமபலம் நிறைந்தவையாக உள்ளது.
டெல்லி அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சத்தை அளிக்கக் கூடிய சிறந்த பந்து வீச்சாளர்கள் லயன்ஸ் அணியில் உள்ளனர்.
லீக் போட்டிகளில் தான் விளையாடிய 4 போட்டிகளில் 3இல் லயன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்ட வரிசையில் அல்விரோ பீட்டர்சன், காக், குலாம் போடி மற்றும் மெக்கன்ஸி ஆகிய அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் டெல்லி அணியின் வெற்றிக்கு தடை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த ஊரில் விளையாடுவது லயன்ஸ் அணியினருக்கு கூடுதல் பலம் அளிக்கக் கூடியது. தென் ஆப்பிரிக்க அணிகளான லயன்ஸ் மற்றும் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதனால் அந்த அணியினரின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அந்த அணியினர் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ad

ad