புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம்: கலிஸ்
சாம்பியன் லீக் தொடரிலிருந்து கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம் என கொல்கத்தா அணி வீரர் ஜக்யூஸ் கலிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.
இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கு மழைதான் காரணம் என்று கொல்கத்தா அணி வீரர் ஜக்யூஸ் காலிஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், டைட்டன்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் எங்களது துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.
அதிரடியாக விளையாடி 188 ஓட்டங்கள் குவித்ததுடன் எதிரணியை 89 ஓட்டங்களில் சுருட்டியது திருப்தி அளிக்கிறது.
பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியுடனான ஆட்டம் மழையால் ரத்தானது எங்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது என்றும் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது துரதிர்ஷ்டவசமானது எனவு
ம் கூறியுள்ளார்.

ad

ad