புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


கே.பி. மூலம் அரச உடமையாக்கிய புலிகளின் நிதி 20000 கோடி எங்கே?!– ஐ.தே.க கேள்வி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளியாக கூறப்படும் கே பி க்கு நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குமரன் பத்மநாதனின் 20000 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்கு என்னவாயிற்று எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தாநாயக்க, கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார்.
குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரம் வழங்கியமை எந்த அடிப்படையில் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.
கே பி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியாக காணப்படுகின்றார்.
இவ்வாறான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கமே கூறுகிறது.
ஆயிரக்கணக்கான எமது இராணுவத்தினரை கொல்ல ஆயுதம் வழங்கியவரை எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுவித்திருப்பதானது எமது நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முழுமையாக மீறியுள்ளதாகவே கருத வேண்டும்.
அது மட்டுமின்றி அவரை கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்ட பாதுகாப்பு படையினரையும் இது அவமதிக்கும் செயலாகும்.
விடுதலைப்புலிகளிடம் உள்ள 20 ஆயிரம் கோடி நிதி, கப்பல்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவை அனைத்தையும் அரசாங்க உடமையாக்கி கொண்டு அந்த நிதியினை கொண்டு வருவதே தமது நோக்கம் என கே பி கைது செய்யப்பட்ட வேளையில் அரசாங்கம் கூறியது.
எனவே அந்த 20.000 கோடி நிதி எங்கே என தாம் கேள்வி எழுப்புவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்

ad

ad