புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


கேபி வெளியில் இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா?- வாசுதேவ நாணயக்காரவிடம் நியாயம் கேட்ட தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்க் கைதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக விசாரணை இன்றி, அல்லது விசாரணைக்கு முடிவு இன்றி, சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஒன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக கைதிகளைப் பார்வையிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், போர் முடிந்த பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து போரிட்ட சுமார் 11,000 பேர்களை மீண்டும் சமூகத்தில் இணைய அனுமதித்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது எந்தவித வழக்கும் போடப்படாமல் அவர் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று முன்னாள் போராளிகள் அமைச்சர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில, எம்மைப் போன்ற சாதாரண அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இவர்களது கோரிக்கைகள் அரசுக்கு கொண்டு செல்லப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழிச் சேவைகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அக்கைதிகளிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற வழக்குகளில் விசாரணைகள் இன்னும் தங்களில் பலர் அறிந்திராத சிங்கள மொழியிலேயே நடப்பதாகவும், சரியான மொழிபெயர்ப்பு வசதிகளைத் தங்களால் பெற முடியாமல் இருப்பதாகவும் அரசியல் கைதிகள் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர், இது பற்றி பரிசீலித்து தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

ad

ad